இந்தியாவில் அமெரிக்க பொருட்கள் மீதான வரி.. பூஜ்ஜியமாகிறது! டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்
வாஷிங்டன்: இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டிருந்தது. இந்த வரியை நீக்க கோரி, அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், எனவே இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆக குறைத்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதேபோல தங்கள் நாட்டு பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக்க இந்தியா முன்வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிவிப்பில், பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும், ஒரு வலிமையான தலைவர் என்றும் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து, இருவரும் விவாதித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான எண்ணெயை வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்பின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி (Reciprocal Tariff) 25% லிருந்து 18% ஆகக் குறைக்கப்படுவதாகவும், இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரிகள் மற்றும் பிற தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க ஒப்புக்கொண்டது என்றும் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல இந்தியா அமெரிக்காவிலிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க உறுதி அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவின் பல்வேறு பொருட்களுக்கு நாம், வெவ்வேறு விகிதங்களில் வரியை விதிக்கிறோம். பொதுவாக, அமெரிக்கப் பொருட்களின் மீது இந்தியா விதிக்கும் சராசரி வரி விகிதம் சுமார் 17% முதல் 18% வரை இருந்தது. ஆனால், அமெரிக்க மதுபானங்களுக்கு 150%, ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு 40%, விவசாய பொருட்களுக்கு 30-70% வரை வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எல்லா பொருட்களுக்கும் வரியை ஜீரோவாக மத்திய அரசு மாற்றுகிறதா? அல்லது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமா? என்பதை இந்த அறிக்கையின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை.
-
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications