Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coronavirus: 13 வயது மகனுக்கு கொரோனா பாதிப்பு.. தனிமைப்படுத்த தாய் செய்த காரியத்தை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தனக்கு கொரோனா பரவக் கூடாது என்பதற்காக தனது மகன் என்றும் பாராமல் கொரோன பாதித்த 13 வயது மகனை காரின் பின்பக்கத்தில் வைத்து பூட்டிய கொடூர தாய் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 7.50 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஓமிக்ரான் பரவலால் ஆங்காங்கே கொரோனா 3ஆவது , 4 ஆவது அலை பரவத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதித்த 13 வயது மகனிடம் இருந்து தனக்கு பாதிக்கும் என்ற அச்சத்தால் தாய் ஒருவர் செய்த கொடூர காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவிட் பரிசோதனை மையம்

கோவிட் பரிசோதனை மையம்

41 வயதான சாரா பீம் என்ற இந்தப் பெண் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள கோவிட் கோவிட் பரிசோதனை மையத்திற்கு தன் மகனை காரின் பின்பக்கத்தில் அடைத்து வைத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளே சென்றார்.

13 வயது சிறுவனுக்கு கொரோனா

13 வயது சிறுவனுக்கு கொரோனா

அப்போது வெளியே இருந்த காரில் ஏதோ சப்தம் வந்துக் கொண்டே இருந்தது. கோவிட் பரிசோதனை மையத்தின் சுகாதாரத் துறை இயக்குநர் பெவின் கார்டன் சாரா பீமின் காரை திறக்க உத்தரவிட்டார். அப்போது அங்கு 13 வயது மகனை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் தகவல் அளித்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

காரின் பின்பக்கம் கதவு

காரின் பின்பக்கம் கதவு

பின்னர் விசாரணையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சைப்ரெஸ் பள்ளியில் ஆசிரியையாக சாரா பணியாற்றி வருகிறார். மகனை வீட்டிற்குள் அனுமதித்தால் அவனுக்கு இருக்கும் கொரோனா தொற்று தனக்கும் பரவி விடும் என்பதால் மகனை காரின் பின்பக்கத்தில் அடைத்து வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சத்தில் உறைந்த தாய்

கொரோனா அச்சத்தில் உறைந்த தாய்


காரில் பயணிப்பதால் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தின் பேரில் பரிசோதனை செய்ய சாரா வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை எச்சரித்து மகனை காரில் பின் சீட்டில் அமர வைத்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறினர்.

தாயா இவர்?

தாயா இவர்?

இருவரும் சமூக இடைவெளியுடன், மாஸ்க் அணிந்தவாறு அமர்ந்ததை அடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. 13 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்ற மகனை மருத்துவமனையில் கூட சேர்க்காமல் தனக்கு பாதிப்பு வந்துவிடும் என அஞ்சி பரிசோதனை செய்துக் கொள்ளும் தாயை என்னவென சொல்வது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+