வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா முடிவுகள் இருந்தால் மட்டுமே அனுமதி.... விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் தங்கள் கொரோனா நேகட்டிவ் முடிவை அளித்தால் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதியளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பிரிட்டனில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்தது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உருமாறிய கொரோனா மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகவும் எச்சரித்தனர்.

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமில்லை

புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமில்லை

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் இருக்கும் தங்கள் விமான போக்குவரத்திற்குத் தடை விதித்தன. இருப்பினும், அமெரிக்கா இதுவரை பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிக்கவில்லை. மேலும், பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளைச் சோதிக்கும் திட்டம் இல்லை எனவும் கடந்த வாரம் டிரம்ப் அரசு அறிவித்திருந்தது.

நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய அறிவிப்பு

நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய அறிவிப்பு

இந்நிலையில், டிரம்ப் அரசின் அறிவிப்பிற்கு நேர்மாறாக பிரிட்டன் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் சோதனை மூலம் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்ட வேண்டும். இந்த சோதனை முடிவுகளை விமானத்தில் ஏறுவதற்கு முன் அளிக்க வேண்டும். பரிசோதனை எடுத்துக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு விமானங்களில் ஏற அனுமதிக்கக்கூடாது

திங்கள்கிழமை நடைமுறைக்கு வரும்

திங்கள்கிழமை நடைமுறைக்கு வரும்

வைரஸ்கள் தொடர்ந்து தன்னை தானே உருமாற்றிக் கொள்கிறது. தற்போது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மற்ற வகைகளை விட 70% அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் தடை உத்தரவு

டிரம்ப்பின் தடை உத்தரவு

முன்னதாக மார்ச் மாதம் பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் அமெரிக்காவில் நுழைய 14 நாள்கள் தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. மே மாதம் அமெரிக்காவில் உச்சம் தொட்டிருந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாகக் குறைந்து.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு

இந்நிலையில், நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,93 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.91 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
The U.S. government will require all airline passengers arriving from the United Kingdom to test negative for COVID-19 within 72 hours of departure starting Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X