டிரம்பால் வந்த வினை..40 இடங்களில் 500க்கும் அதிகமான விமானங்கள் ரத்து.. முடங்கியது அமெரிக்கா..பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடங்கி உள்ளது. அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலையால் ஊதியமின்றி ஊழியர்கள் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் முக்கிய துறைகளின் சேவைகள் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று 40 விமான நிலையங்களில் இருந்து 500க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். உலக நாடுகள் மீது வரி விதிப்பது, அமெரிக்காவின் குடியேற்ற சட்டத்தில் கடுமை காட்டுவது, எச் 1பி விசா கட்டணத்தை உயர்த்தியது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் டிரம்பின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கு தேவையான நிதியை விடுவிப்பதில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதிவிடுவிப்பு தடைபட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நிதி முடக்கம் தொடங்கியது. தற்போது ஒரு மாதத்தை கடந்தும் நிலைமை சரியாகவில்லை.
இதையடுத்து, அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்களில் ஒரு தரப்பினர் விடுப்பில் சென்றுள்ளனர். அரசு துறைகளுக்கு செலவழிக்க பணம் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்காவில் நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளதாகவும், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு சேவைகள் முடங்கி உள்ளது. குறிப்பாக விமான சேவையும் முடங்கி உள்ளது. அதன்படி இன்று மட்டும் மொத்தம் 500க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட 40 விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது தான். இதனால் நாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கு விமான போக்குவரத்தை குறைக்க அமெரிக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்க மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பார்கள். இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை FlightAware இணையதளம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த இணையதளம், ‛‛நவம்பர் 7 ம் தேதி 500க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியில் இருந்தே விமான சேவைகள் தொடர்ந்து ரத்தாகி வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications