தடுப்பூசி போட்டால் 'கஞ்சா' இலவசம்.. கொரோனா வேக்சினை ஊக்குவிக்க.. வேற லெவலுக்கு சென்ற அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் திட்டத்திற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவல் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டன
பின்தங்கிய & வளரும் நாடுகள் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளையும் கூட கொரோனா பரவல் விட்டு வைக்கவில்லை. அமெரிக்கா. பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாகவே இருந்தது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பு
குறிப்பாக, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு சுமார் 3.4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு டிரம்ப் ஆட்சியில் இருந்தபோதே கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிக மோசமான ஒரு நிலையில் இருந்தது. அதன் பின்னரே, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பைடன் நிர்வாகம்
முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்க நிர்ணயத்து அந்நாட்டு அரசு இயங்கியது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாகாணங்களும் புதிய திட்டங்களையும் அறிவித்தனர். ஊக்குவிப்பு திட்டங்களை முழுமையாக ஆதரிப்பதாக பைடன் நிர்வாகம் அறிவித்திருந்தன. அதன்படி பல மாகாணங்களும் இலவச பீர், லாட்டரி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.

இலவசமாகக் கஞ்சா
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் அடுத்த லெவலுக்கே சென்றுவிட்டது. ஆம், அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் joints for jabs திட்டத்திற்கு அம்மாகாண அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 21 வயதைக் கடந்தவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கப்படும்.

joints for jabs திட்டம்
வாஷிங்டன் மாகாணத்தில் இதுவரை 58% குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 49% மக்களுக்குத் தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த joints for jabs திட்டம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் என அம்மாகாண அரசு அறிவித்துள்ளது. முன்னதாக அரிசோனா மாகாணத்திலும் இதேபோல தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச கஞ்சா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கச் சட்டம் சொல்வது என்ன
அமெரிக்காவின் மத்திய அரசின் சட்டப்படி கஞ்சா தற்போது வரை தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்தான். ஆனாலும், அங்கு மாகாண அரசின் சட்டமே பிரதானம். அதன்படி அமெரிக்காவில் 36 மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்தச் சட்ட ரீதியான அனுமதி உள்ளது. இதற்காக அங்கு சிறப்புக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 14 மாகாணங்களில் மட்டுமே கஞ்சாவை பயன்படுத்தத் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications