ஹேப்பியா.. வாட்ஸ்அப்பில் வருகிறது சூப்பர் அப்டேட்.. இனி நீங்கள் 'இதையும்' ஸ்டேடசாக வைக்க முடியும்!
வாஷிங்டன்: வாட்ஸ் அப் செயலியில் தற்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி இருக்கும் நிலையில், புதிய அப்டேட்டாக வாய்ஸ் நோட்ஸ்களையும் இனி ஸ்டேட்டசாக வைக்கும் வசதியினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.
காலையில் விழித்ததும் இப்போதெல்லாம் எல்லோரும் முதலில் பார்ப்பது வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும் என்றும் சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்களில் மத்தியில் வாட்ஸ் அப் பிரபலம் ஆகிவிட்டது.
2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்! மீண்டும் செயல்பட தொடங்கியது! என்ன நடந்தது? மெட்டா சொல்வது என்ன

வாட்ஸ்-அப் செயலி
உலகம் முழுவதும் 2.26 பில்லியன் பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வெறும் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இல்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்கள் என பல வசதிகளை வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்து வருகிறது. இதனால், வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் யூசர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதுப்பித்து அப்டேட்களை வாட்ஸ் அப் வெளியிட்டு அசத்தி வருகிறது.

புதுப்புது அப்டேட்கள்
முதலில் வெறும் குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பும் செயலியாக கால் பதித்த வாட்ஸ் அப் நாளடைவில் கொடுத்த அப்டேட்கள்தான் அது இன்றளவும் சமூக வலைத்தளங்களில் ஜாம்பவான் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காரணம் எனலாம். வெறும் மெசேஜ் அனுப்புவதை தாண்டி, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது, ஸ்டேடஸ் வைப்பது என சமூக வலைத்தள பயனர்களுக்கு அசத்தல் வசதிகளை கொடுத்து வருகிறது.

வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்டேட்டஸ் ஆக..
அந்தவகையில், வாய்ஸ் நோட்ஸ்களை ஸ்டேடஸ் ஆக வைக்கும் வகையில் ஒரு அசத்தல் அப்டேட்டிற்கு வாட்ஸ் அப் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வாட்ஸ் அப் வெளியிடும் புதிய அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்து தகவல்களை தெரிவிக்கும் ஆன்லைன் தளமான WaBetaInfo- இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது வாட்ஸ் அப் ஸேட்டஸ்களாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைக்க முடியும்.

30 செகண்டுகள் வரை
வீடியோக்களை அதிகபட்சமாக 30 செகண்டுகள் வைக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதே முறையை பின்பற்றி வாய்ஸ் நோட்ஸ்களையும் ஸ்டேஸ்களாக வைக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறதாம். அதிகபட்சமாக 30 செகண்டுகள் வரை வாய்ஸ் நோட்ஸ்களாக வைக்கும் வசதியை யூசர்களுக்கு வாட்ஸ் அப் அளிக்க இருக்கிறதாம். வாய்ஸ் நோட்ஸ்களை யாருக்கு ஷேர் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்பட உள்ளது.

ஐபோன் யூசர்களுக்கு மட்டும் இன்றி
விரைவில் வர இருக்கும் அப்டேட்கள் ஐபோன் யூசர்களுக்கு மட்டும் இன்றி ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் சேர்த்தே வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இந்த அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாகவும் WaBetaInfo- தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.