இப்படியா பண்ணுவீங்க.. பேசிக்கிட்ருக்கேன்ல.. ‘எங்களுக்கும் பசிக்கும்ல..’ - அப்செட்டான டிடிவி.தினகரன்!
திருப்பத்தூர் : அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பேசிக்கொண்டு இருக்கும்போதே தொண்டர்கள் பெரும்பாலானோர் கலைந்து சென்றதால், அதிர்ச்சி அடைந்த டி.டி.வி.தினகரன், கோபமாகப் பேசினார்.
அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார் தினகரன்.
அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அமமுக கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் அமமுக தொண்டர்கள், கூட்டம் தொடங்குவதற்கு பல மணி நேரம் முன்பே வரத் தொடங்கினர். ஆனால், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை 7 மணிக்குத்தான் கூட்டம் நடைபெற்ற விழா மேடைக்கு வந்தடைந்தார்.

தாமதாக வந்த தினகரன்
தாமதமாக வந்த டி.டி.வி.தினகரன், பின்னர் மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோதே தொண்டர்கள் பெரும்பாலானோர் எழுந்து சென்று உணவு அருந்தும் தளத்திற்கு வரிசை கட்டி நின்றனர். இதனால் கோபமடைந்த டி.டி.வி.தினகரன், "நான் பேசிக்கிட்டே இருக்கேன்.. எல்லோரும் சாப்பிட போறீங்களா" என்று கோபமாகக் கேட்டார்.

டிடிவி.தினகரன் கோபம்
தினகரன் பேசுவதைப் பொருட்படுத்தாத அமமுக தொண்டர்கள், "எங்களுக்கும் பசிக்கும்ல.. சாப்பிட கூடாதா" என்பதுபோல முணுமுணுத்தபடி கலைந்து சென்றனர். பின்னர் பேச்சை முடித்துக் கொண்ட டி.டி.வி.தினகரன் விரக்தி அடைந்து இருக்கையில் அமர்ந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வரவேற்பு இல்லை
தமிழகம் முழுவதும் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறார் டிடிவி.தினகரன். மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரிசையாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தியபோது, தினகரனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வட மாவட்டங்களில் அமமுகவுக்கு பலம் இல்லை எனக் கூறப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications