பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மணிகண்டன் வீட்டில் மகிழ்ச்சி கொண்டாட்டம்.. மனைவிக்கு குவியும் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மணிகண்டன் தன்னுடைய மனைவியின் பிறந்த நாளை விமர்சனமாக கொண்டாடி இருக்கிறார்.
பிக் பாஸ் மணிகண்டன் சின்னத்திரை நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
மணிகண்டனின் மனைவி சோபியா தன்னுடைய மகனோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
சோபியா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய மகனோடு கலந்து கொண்டுள்ளார்.

சீரியலில் அறிமுகம்
பிக் பாஸ் மணிகண்டன் ஆரம்பத்தில் சின்ன திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தான். இவர் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக
அவருடைய காதல் மனைவியை சந்தித்து இருந்தாராம் .அப்போதுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் என்கிற சீரியல் ஆரம்பத்தில் மணிகண்டனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் மணிகண்டனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னதான் சின்ன சின்ன வேடங்கள் இவருக்கு கிடைத்தாலும் இவருடைய திறமைக்கு ஏத்த மேடை கிடைக்கவில்லையே என்று தான் இவர் தேடிக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன்
நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் அவருடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதற்குப் பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்பு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரை ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு இடங்களுக்காக கூட்டிக்கொண்டு சென்று வாய்ப்பு தேடி அலைந்ததில் மணிகண்டன் உடைய பங்கும் பெரியதாக இருந்திருக்கிறது. என்னதான் மணிகண்டன் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்று கூறிக் கொண்டிருந்தாலும், தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக ஒரு மேடை வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் அவருக்கு ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜோடி நிகழ்ச்சியில் உருவான ஜோடி
ஜோடி நிகழ்ச்சியில் மணிகண்டனுடன் ஜோடியாக டான்ஸ் ஆட வந்தவர் தான் சோபியா. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலித்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் மணிகண்டனின் வீட்டில் அவருடைய திருமணத்திற்கு அதிகமாக வற்புறுத்தல் வரவே மணிகண்டன் சோபியாவிடம் திருமணத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அதற்கு சோபியாவும் சம்மதம் தெரிவிக்க திருமணம் செய்திருக்கின்றனர். திருமணத்தின் போது சோபியாவிற்கு 20 வயது தானாம் ஆனால் அப்போது மணிகண்டனின் வயது 30 வயதாம் அது இப்ப வரைக்கும் தனக்கு ஒரு உறுத்துதலாக இருக்கிறது என்று பிக் பாஸ் வீட்டிற்குள் மணிகண்டன் கூறியிருந்தார். அதற்கு பிறகு திருமணத்திற்கு பிறகு மணிகண்டனுக்கு ஆரியன் என்கிற ஒரு குழந்தை பிறந்திருக்கிறான்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
குழந்தை பிறக்கும் நேரத்தில் சோபியாவின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் மணிகண்டன் உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் சோபியா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தன்னுடைய மகனோடு கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டிற்குள் நான்கு முறை தலைவராக பொறுப்பேற்று சாதனையை படைத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மனைவிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications