Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்கழி திருவாதிரை.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்..பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நெல்லை அருகே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம், திருவாலங்காடு வட ஆரோண்யேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் திருவாதிரை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும். திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Chidambaram Natarajar Temple the Arudra Darisanam festival begins with Flag hoisting

சிவபெருமானின் பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா தரிசன விழா எனப்படும் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். பொற்சபை என போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாதிரை திருவிழா கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4ஆம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஆருத்ரா தாிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. 7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8ஆம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்திற்கான விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து திருநீறு பூச வேண்டும். அன்றைய தினம் சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இந்த ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்லையப்பர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம், சங்கரன்கோவில், திருவாலங்காடு வட ஆரோண்யேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் திருவாதிரை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+