வாங்குற சம்பளம் சட்டுன்னு கரைஞ்சி போயிருதா.. வியாழக்கிழமைகளில் இதை பண்ணுங்க.. செலவு ஸ்டாப்!
சென்னை: கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று மாத சம்பளதாரர்கள் பலர் பாடிக்கொண்டிருப்பார்கள். மாத மாதம் ஏதாவது ஒரு விரைய செலவு வந்து விடுகிறதே என்ன செய்தால் அநாவாசிய செலவுகளைத் தவிர்க்கலாம் என்றும் பலரும் இன்றைக்கு யோசிக்கின்றனர். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்து சுப விரைய செலவாக மாற்ற சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை எப்படி செய்யலாம் எந்த நாளில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மாத சம்பளத்தை வாங்கியவுடன் நாம் எந்த செலவும் செய்யாமல் முதல் செலவாக கல் உப்பு வாங்க வேண்டும். இப்படி செலவு செய்வதால் குபேர நன்மை ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவு வர வாய்ப்பு இல்லை.
தினமும் காலை லட்சுமி படத்திற்கு முன்பு நல்லெண்ணெயில் திரியிட்டு விளக்கினை ஏற்கினால் தனலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருப்பாள். எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் சனி மூளையில் கற்பூரம் கொளுத்தி தொடங்கினால் சனி பகவானின் கருணை ஏற்பட்டு செல்வம் அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்கும்
வட கிழக்கு மூலையில் சிறிய பாத்திரத்தை வைத்து அதில் சுத்தமான நீரை நிரப்பி அருகம்புல் அல்லது எலுமிச்சையை போட்டு வைத்தால் பணப்பற்றாக்குறை நீங்கி செல்வ சேமிப்பு ஏற்படும். குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

துளசி செடி
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டின் தலைவாசல் மிக முக்கியமான பகுதியாகும். வாஸ்து சாஸ்திரப்படி, துளசி செடியை பிரதான கதவுக்கு முன் வைப்பது மிகவும் பலன் தரும். இது விஷ்ணுவின் செடி என்றும் அழைக்கப்படுகிறது. துளசி செடியை பார்த்துக்கொண்டே இருப்பது நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் வீட்டிற்குள் கொண்டு வர உதவும்

வியாழக்கிழமை வழிபாடு
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும். வியாழக்கிழமை குபேரனை வழிபட்டால் அதிகமாக செல்வம் சேரும். இறைபக்தியுடன் இருத்தலும் வாரம் தவறாமல் கோயிலுக்கு செல்வதும் உங்களுக்கு மன நிம்மதியை தருவதோடு, பண வரவையும் தருகிறது. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும். தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் பார்த்தாலும் பண வரவு அதிகரிக்கும்.

குரு ஓரையில் பூஜை
ஆகாசதாமரை செடியை வியாழக்கிழமைகளில் வாங்கி அதை முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி கட்டி வைத்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை யாரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். குரு ஓரை எனப்படும் வியாழக்கிழமை காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை குபேர பூஜை
பூசம் நட்சத்திரம் சனிக்கிழமையுடனோ அல்லது வியாழக்கிழமையுடனோ இணைந்து வருவது சிறப்பு. அன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்றோ, சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்றோ வழிபடலாம். வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார். ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வருவதால் அந்த நாளில் மறக்காமல் குபேர பூஜை செய்ய வீண் விரைய செலவுகள் ஏற்படுவது குறையும் செல்வத்தை வாரி வழங்குவார் குபேரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications