கொட்டும் மழை.. ஐயப்பனை காண சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்..எங்கும் எதிரொலிக்கும் சரண கோஷம்
சபரிமலை: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை எங்கும் சரண கோஷம் எதிரொலித்து வருகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொட்டும் மழைக்கு இடையே தரிசனம் செய்தனர்.
முதல் நாளான வியாழக்கிழமை மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நண்பகல் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது தீபாராதனை, புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாழ பூஜைகள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மழையிலும் தரிசனம்
சபரிமலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தபோதும், பக்தர்கள் நனைந்தவாறு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பம்பை, நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், மலை ஏறுவதற்கு சிரமமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை 7 மணி வரை 25 ,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று வரை 1 லட்சத்து 28 ,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அருவிகளில் ஆனந்த குளியல்
சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு, கன்னியாகுமரி வழியாக திரும்பும் பக்தர்கள், திற்பரப்பு அருவியில் ஆனந்தக் குளியல் போடுகின்றனர். தென்காசி வழியாக ஊர் திரும்பும் பக்தர்கள் குற்றால அருவிகளிலும் குளித்து விட்டு திருக்குற்றால நாதரை தரிசனம் செய்கின்றனர். தை மாதம் வரை சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், திற்பரப்பு அருவிக்கும், குற்றால அருவிகளுக்கும் வருவார்கள் என்பதால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications