திருச்செந்தூரில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்.. மொய் எழுதிய பக்தர்கள்
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் மொய் எழுதினர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடந்தது. விழாவின் இறுதி நாளான 7-ம் நாளான இன்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையம், உதய மார்த்தாண்ட அபிஷேகமமும் நடந்தது.

இரவில் ராஜகோபுரம் முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமிமலையில் நேற்றிரவு சண்முகர் தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வும் நடைபெற்ற பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னியாகம் வளர்த்து மங்கள நாண் பூட்ட தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமி கோவிலில் நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மேலவாசல் முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் முருகன் சன்னதிகளிலும் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications