தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..பணம் ஆறாக பெருகி உங்க வீட்டிற்கு வரும்..ஆன்மீக ரகசியங்கள்
சென்னை: பணம் சம்பாதிப்பதற்கு பல மணி நேரம் உழைத்தாலும் சிலருக்கு 1000 ரூபாய் கூட கூலி கிடைக்க சிரமமாக உள்ளது. ஒரு சிலருக்கோ பணம் எளிதாக சம்பாதிக்க முடிகிறது. குறிப்பாக மார்வாடிகள் மிகப்பெரிய வணிகர்களாகவும் பணத்தை எளிதில் ஈர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் பணம் எப்படி சேருகிறது? சாமானிய மக்களும் பணத்தை ஈர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்மீக ரீதியான பரிகாரங்களைப் பார்க்கலாம்.
செல்வம் சேர சில சூட்சுமங்கள் இருக்கின்றன. நான் ஆனந்தமாக இருக்கிறேன்.. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நினைப்பதும் பேசுவதுமே பணத்தை ஈர்க்கும் ரகசியமாக உள்ளது. சிலரோ பணத்தை தண்ணீராக செலவு செய்கிறான் என்று சொல்வார்கள். அந்த தண்ணீர்தான் பணத்தை ஈர்க்கும் மிகப்பெரிய பொருளாக உள்ளது.
வெளியூர் செல்லும் போது மட்டுமல்லாது எங்கு சென்றாலும் கை பையில் தண்ணீர் உடன் வைத்திருங்கள்... தண்ணீர் சிக்கனம் மிக மிக அவசியம்..தண்ணீரை சேமிப்பது பணத்தை ஈர்க்க கூடிய நேரடி தொடர்பு கொண்டது. நம்முடைய வீட்டில் கூட ஈசான்ய மூலையில் தண்ணீரை கீழ்நிலை தொட்டியில் சேகரிப்பார்கள். பண்டைய காலங்களில் ஈசான்ய மூலையில் கிணறு வெட்டியது கூட வாஸ்து படி செல்வம் சேரத்தான்.

நேர்மறை எண்ணம் அவசியம்
நமக்கு பணம் வர வேண்டும் நாம் செல்வந்தராக வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே பணத்தை ஈர்க்கும் மிக முக்கிய வழியாகும். பணக்காரர் ஒருவரை நீங்கள் முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு அவரைப்போல நேர்மையான வழியில் பணத்தை சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

பேசும் வார்த்தைகள்
வார்த்தையே நம் செயலாக மாறுகிறது. அதனால்தான் பேசும் வார்த்தை நேர்மறையாக இருக்கவேண்டும். வார்த்தையே நம் செயலாக மாறுகிறது. நான் ஆனந்தமாக இருக்கிறேன். விரைவில் மிகப்பெரிய பணக்காரனாக மாறுவேன் என்று அடிக்கடி வீட்டில் குடும்பத்தினருடன் பேசுங்கள். செய்தி தாளில் கூட எதிர்மறை செய்திகளை படிப்பதை தவிர்க்கவும்.

சமையல் அறை ரகசியம்
வீட்டின் சமையல் அறையில் மளிகை பொருட்கள் வீட்டில் எப்போதும் நிறைந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். காலி டப்பாக்களை வைக்க வேண்டாம். சமைத்த பாத்திரத்தை இரவே கழுவி வைத்துவிடுங்கள். எச்சில் பாத்திரங்கள், சாப்பிட்ட தட்டுக்களை அப்படியே சமையல் அறையில் போட்டு வைத்திருக்க வேண்டாம். வட மேற்குப் பகுதியில் சிறிய வண்ண மீன்கள் வளர்ப்பது மற்றும் அதை தினமும் ஒரு ஐந்து நிமிடம் பார்ப்பது பணத்தை ஈர்க்க கூடிய அதிர்வலையை உருவாக்கும்.

கடன் அடைய வழி
வரவு செலவு கணக்கு எழுதும் நோட்டில் நமக்கு வரக்கூடிய வருமானத்தை மகிழ்ச்சியுடன் எழுதவும். இது நேர்மறை சிந்தனையை உண்டாக்கும் பணத்தை ஈர்க்கும். கடன் இருக்கும் பட்சத்தில் அதை திருப்பி அடைத்த திருப்தியுடன் இருப்பதாக சிந்தித்து அதனை மஞ்சள் நிற காகிதத்தில் சிவப்பு மையில் எழுதவும். கடன் தீர்வதற்கான வழிவகை ஏற்படும்.

மவுன விரதம்
தினமும் குறைந்த து20-30 நிமிடங்கள் யாருடன் பேசாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. அந்த நேரத்தில் நாம் பணக்காரர் ஆவதற்கான வழிமுறைகளை யோசிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசி முக்கியம். பெரியவர்களின் மனமும் புண்படும்படி பேசாதீர்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications