துள்ளி வந்த வேல்..கையில் வாங்கிய சிக்கல் சிங்கார வேலர்..ஆறாக பெருகிய வியர்வை..விண்ணை எட்டிய அரோகரா
நாகப்பட்டினம்: சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. நாகை அருகே சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவில். சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முருகப்பெருமான் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிர்த்ததைப் பார்த்து பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டனர்.
ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது. மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்று கூறுகின்றனர்
தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது.
அந்த குளமே இன்று 'தேனு தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

சக்தி பீடங்கள்
அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது.

நெடுங்கண்ணி
இதனால் இத்தலப் பெருமாள் 'கோல வாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார்.பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு.

சிவனை வழிபட்ட முருகன்
'ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார். சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார்.

வேல் கொடுத்த அன்னை
சிவபெருமான் நேரில் தோன்றி, 'போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்' என வரம் தந்ததோடு, 'உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார். அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். இந்தத் தலத்தில் அம்மை - அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார் சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன்.

சூரசம்ஹாரம் செய்த முருகன்
குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் 'வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் பெயர் பெற்றார். அன்னையிடம் வாங்கிய வேல் கொண்டு சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி போரில் வெற்றி பெற்றார் முருகப்பெருமான் என்கிறது கந்த புராணம். சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன். ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, 'சக்தி - வேலன் புறப்பாடு'களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சிக்கலில் தேரோட்டம்
சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முகத்தில் வியர்வை துளிகள்
சூரனை சம்ஹாரம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் போது சிங்கார வேலரின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பியது. அதைக்காண காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

திருப்பரங்குன்றத்து முருகன்
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற் படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ஆம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று "வேல்வாங்கும்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், சத்திய கிரீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்தநிலையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விண்ணை எட்டிய வீர முழக்கம்
இதில் முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வேல் வாங்கி சகல பரிவாரங்களுடன் கோவர்த்தனாம்பிகை சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது திரளாக கூடி இருந்த பக்தர்கள், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள மண்டபங்கள் மற்றும் சஷ்டி மண்டப வளாக பகுதியில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications