முதல்நாளே கிழிஞ்சு போச்சு.. போகப்போக இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ...ஆட்டம் ஆரம்பம்
சென்னை: தற்போது தொடங்கிய குக் வித் கோமாளி மூன்றாவது சீஸனில் கிரேஸ் காமெடி வேற லெவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
என்ன இருந்தாலும் முதல் நாளிலேயே இப்படியா என்று பலரும் திகைத்துப்போய் இருக்கிறார்கள்.

சோகத்துக்கு மாற்று நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்துவருகிறது. அழுகாச்சி சீரியல்களுக்கு மாற்றாகத் தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவை பார்த்துதான் தற்போது இது மூன்றாவது சீஸனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல போட்டியாளர்கள் புதுமுகமாக அறிமுகமாகி வருகின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு சில போட்டியாளர்கள் புகழின் உச்சத்தில் தற்போது வந்த கொண்டிருக்கின்றனர்.

கிரேஸின் புது அவதாரம்
இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் இருக்கும் ஆதரவை பார்த்து பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது புதிய ஒரு குக்காக களமிறங்கியிருக்கும் கிரேஸ் இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய வழக்கமான காமெடி மற்றும் திறமையை இந்த நிகழ்ச்சியிலும் களமிறங்கியிருக்கிறார். இவர் சும்மாவே காமெடியில் புகுந்து விளையாடுவார். தற்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக களமிறங்கியிருக்கிறார். இருந்தாலும் விட்டுவிட மாட்டேன் என்று முடிவெடுத்து இருக்கிறார் போல, அதனால்தான் அவரோடு ஜோடி சேர்ந்திருக்கும் சீத்தல் உடன் சேர்ந்து இவர் புகுந்து விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

என்னது இட்லியா
ஏற்கனவே தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்திருக்கும் கிரேஸ் இந்த நிகழ்ச்சியின் மூலமாக மேலும் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறார். முதல்நாள் எபிசோடில் இவரை சீத்தல் செலட் பண்ணுவார் என்று யாரும் எதிர்க்கவில்லை. டிக் டாக் பிரபலமான சீத்தல் தர்ஷனை தான் செலட் செய்வார் என்று சிவாங்கி கூட கூறி வந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கிரேஸை செலட் செய்து விட்டனர். கிரேஸ் தன்னுடைய அக்கா போல புசுபுசுவென இட்லி மாதிரி இருப்பதால் எனக்கு பிடித்திருக்கிறது என்று இவர் கூறியது அனைவராலும் ரசிக்கப்பட்டது.

முதல்நாளே கிழிஞ்சி போச்சி
தற்போது சீத்தல் மற்றும் க்ரேஸ் அடாவடியான காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். முதல்நாளில் இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகளால் புது டிரஸ் கிழிந்து போய்விட்டதே என்று க்ரேஸ் கூறியிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல, காமெடியால் முதல்நாளே டிரஸ்சை கிழித்து விட்டார்களே. .!! இந்த சீசன் போகப்போக என்னெவெல்லாம் செய்யப் போகிறதோ என்று பயம் கலந்த தோணியில் கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே ரசிகர்கள் பலர் கிரேசை செல்லமாக அக்கா என்று அழைத்து வருவார்கள். அக்காவுக்கு முதல் வாரத்திலே இந்த நிலைமை என்றால் போகப் போக இன்னும் என்ன எல்லாம் இருக்கப்போகிறது தெரியவில்லையே என்றும் சிலர் அனுதாபங்களை சிந்திக்கிறார்கள்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications