புகைப்படத்தை காட்டி மகிழ்ச்சியை பகிர்ந்த இளம் தம்பதிகளான நவீன்,கண்மணி... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கண்ட நாள் முதல் சீரியலின் கதாநாயகனாக நடித்து வரும் நவீன் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணியை சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இளம் தம்பதிகளாக இருக்கும் இவர்கள் ஜோடியாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
பல நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் இவர்களிடம் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

சீரியலுக்கு வருவதற்கான காரணம்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வரும் நவீனுக்கு ஏற்கனவே சீரியல் வட்டாரத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர் காலேஜ் படிப்பை முடித்ததும் மாடலின் மூலமாக ஒரு சில திரைப்படங்களின் சைட் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய திறமைக்கு ஏற்ப கதை அமையாததால் இவர் சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார். சீரியலில் முதல் முதலாக இவருக்கு இதயத்தை திருடாதே சீரியல் பெரிய அளவில் வெற்றியை கொடுத்து இருந்தது.

போலீஸ் கேரக்டரில் அசத்தல்
இதயத்தை திருடாதே சீரியலில் முரட்டுத்தனமான சிவா கேரக்டரில் இவரை பார்த்து பழகிய ரசிகர்கள் இவர் இப்படித்தான் இருப்பார் என்று நம்பி விட்டார்களாம். என்னதான் இவர் அந்த சீரியலில் முரட்டுத்தனமாக இருந்தாலும் அவருடைய மனைவி குழந்தையின் மீது வைத்திருக்கும் பாசத்தை இரண்டாவது சீசனில் ரசிகர்கள் அதிகமாக புரிந்து கொள்ள முடிந்ததாம். அதனால் தான் இந்த சீரியல் முடிவடைந்ததும் பல ரசிகர்கள் இவரை அதிகமாக மிஸ் பண்ணி வந்திருக்கிறார்கள். இவர் தொடர்ந்து சீரியலில் வரவேண்டும் என்று இவருடைய ரசிகைகள் இவருக்கு சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகளை வைத்து வந்தனர். அந்த நேரத்தில் தான் தற்போது நடித்து வரும் கண்ட நாள் முதல் சீரியல் இவர் கமிட் ஆகி இருக்கிறார்.

திடீர் திருமணம்
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருக்கும் காதல் திருமணமா என்று பலர் கேள்விகளை கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் இல்லை. இது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான் என்று கூறி இருந்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய துறைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த கண்மணி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தார்.

மகிழ்ச்சியான புகைப்படங்கள்
சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருக்கும் நவீன் கொஞ்ச நாட்களாக தனியாகவே போட்டோக்களை பதிவிட்டு வருகிறாராம். இதனால் இவருடைய ரசிகர்கள் பலர் இவரிடம் ஜோடியாக கண்மணியோடு சேர்ந்து புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்டு வந்துள்ளார்கள். ரசிகர்களின் அன்பு கட்டளைக்கு ஆக தற்போது கண்மணியும் நவீனும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் அவர்களுடைய திருமண புகைப்படங்களை கையில் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருடைய பேக்ரவுண்டில் டெக்கரேஷன் வேற லெவலில் இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இது எதற்கான பதிவு என்று குழம்பி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் ஏதாவது குட் நியூஸ் உண்டா?? என்று வழக்கம்போல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் சிம்பலை தவிர எந்த கேப்ஷனையும் வைக்கவில்லை. ஆனால் ஹார்டின் மூன்று வைத்திருக்கிறார்கள். அதனால் ஒருவேளை "அப்படி" இருக்குமோ என்று ரசிகர்கள் வழக்கம் போல வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications