நடிகர் பிரேம்குமாரின் மகனா இவர்.. மகனை குறித்த பெருமை.. வியப்பில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் பிரேம் குமார் பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மகனை குறித்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
பிரேம் குமாருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலர் வியப்பில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
நடிகர் பிரேம் குமார் இந்தியாவின் வருங்கால கிரிக்கெட் வீரர் என்று தனது மகனை மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி
பிரேம்குமார் ராம்நாட்டின் ராஜாவான சண்முக ராஜேஸ்வர சேதுபதியின் பேரனாக இருந்தாலும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக கே பாலச்சந்தர் தயாரித்த சமுத்திரக்கனி இயக்கிய அண்ணி என்ற சீரியலில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை என்ற சீரியலில் அவர் நடித்ததை பார்த்து தான் அவருக்கு கருணாநிதியால் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஜோடி நம்பர் ஒன் சீசன் ஒன்றில் அண்ணாமலை சீரியலில் தன்னோடு நடித்த பூஜா உடன் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

மீண்டும் எதிர்பார்க்கும் சின்னத்திரை ரசிகர்கள்
நடிப்பதில் மட்டுமல்ல தனது குடும்பத்தின் மீது தீராத பாசத்தை வைத்து இருக்கும் பிரேம்குமார் தன்னுடைய குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். சின்னத்திரையில் இவருடைய அழகான நடிப்பை பார்த்து ரசித்த ரசிகர்கள் பலர் இவர் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றி இவரிடம் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இவர் தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் சீரியலின் பக்கம் தனது கவனத்தை மீண்டும் செலுத்தாமல் இருந்து வருகிறார்.

மகனைக் குறித்த பதிவு
திரைப்படங்களிலும் சீரியல் களிலும் தனது தத்ரூபமான நடிப்பை வெளிகாட்டிய பிரேம்குமார் தற்போது தனது மகனுடன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களால் பலரால் பகிரப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவருடைய மகன் பெயர் கௌஷிக் தனது மகன் கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறாராம். வருங்கால டி இந்தியா வின் வீரராக வலம் வருவார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய போஸ்ட்க்கு கோவை கிங்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் நான் பங்கேற்றேன். நம்பிக்கை உரிய கிரிக்கெட் வீரர் வருங்கால டி இந்தியாவின் வீரர் மற்றும் என்னுடைய மகனை சிறு வயது நண்பர்கள் சந்தித்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரேம் குமார் பார்ப்பதற்கு இப்போதும் ஹீரோ போல இருக்கிறார். இவருடைய மகன் இவ்வளவு பெரியவராக வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் விரைவில் இந்தியா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக உங்களுடைய மகன் வரவேண்டும் என்று பலர் தங்களுடைய அன்பை கமெண்டுகளில் வாழ்த்துக்களாக கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருமாறு பிரேம் குமாருக்கு அன்பு கட்டளைகளையும் விட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications