தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி ட்வீட் செய்து டெலிட் செய்த ராஜு.. கடைசியில் இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: விஜய் டிவியில் சீரியலில் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 டைட்டில் வின்னர் ஆக இருக்கும் ராஜு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுக்கு புது அப்டேட் கொடுத்து சில நிமிடங்களில் அந்த போஸ்ட்டை டெலிட் செய்திருக்கிறார்.
டைட்டில் ஜெயிச்ச ராஜு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர்பாராத மகிழ்ச்சியை சில நிமிடங்களில் ரசிகர்களிடமிருந்து மறைக்க காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.

டைட்டில் வின்னர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராஜு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி மற்றும் தனித்துவமான கேரக்டர் மூலமாகவே ஐந்தாவது சீசனில் டைட்டிலை தட்டி தூக்கி விட்டார். இவர் தான் ஜெயிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் இவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்தனர். பல சண்டை போட்டு முட்டி மோதி கொண்டிருந்தாலும், இவர் கூலாக எப்போதும் ஜாலியாக கலாய்த்து கொண்டிருப்பதை வைத்து இவர் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

கலாய்த்த மன்சூர் அலிகான்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய பல நாள் ஆசையான கதாநாயகனாக திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து இவர் கதாநாயகனாக மாறிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வூட்ல பார்ட்டி என்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்களை கலாய்த்து கொண்டு கலகலப்பாக சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவரை விடவும் சிறப்பு விருந்தினர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக கலந்து வந்து கொண்டிருந்த மன்சூர் அலிகான் நிகழ்ச்சியிலே ராஜுவை பற்றி அதிகமாக கலாய்த்து இருந்தார். அதற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் இருந்து ராஜு ஒதுங்கி இருக்கிறார்.

இசை வெளியீட்டு விழா தொகுப்பாளர்
ராஜூ உடன் அதே சீசனில் சக போட்டியாளர்களாக இருந்த பாவனி, அமீர், சிபி சக்ரவர்த்தி எல்லாம் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். அதுவும் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் இவர்களுடைய நடிப்பும் இருக்கிறது. இந்த நிலையில் ராஜூவுக்கு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ இவர் தனது கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். ஆமாம் அது வேறொன்றுமில்லை வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இவர்தான் தொகுத்து வழங்க இருப்பதாக தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார்.

டெலிட் செய்யப்பட்ட அப்டேட்
ஆரம்பத்தில் இருந்தே வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டில் பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட ஏற்கனவே அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால், வாரிசு திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள் அழிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது .இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்களின் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு இருக்கின்றது .ஆனாலும் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ராஜு, வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான்தான் தொகுப்பாளராக பணியாற்ற போவதாகவும், இசை வெளியிட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இவர் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் இந்த பதிவை நீக்கி இருக்கிறார். ஆனால் அவர் வெளியிட்ட பதிவை பலர் ஸ்கிரீன்ஷாட் களாக எடுத்து பதிவிட சமூக வலைத்தளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications