நன்றி மறவாத விதார்த்.. அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் போயிட்டாரே! நெப்போலியன் நெகிழ்ச்சி பதிவு
சென்னை: தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பாலும், மனிதநேயத்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விதார்த், சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று வார சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது நடிகர் நெப்போலியன் குடும்பத்தை நேரில் சந்தித்து இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் வசிக்கும் டெனசீ - நாஷ்வில் நகருக்கு விதார்த் குடும்பத்துடன் சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நடிகர் நெப்போலியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு பகிர்ந்து, அந்த நாட்களை "மிகவும் மகிழ்ச்சியான நான்கு நாட்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நெப்போலியன் பதிவில், விதார்த் தனது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காகவே குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நாஷ்வில்லில் உள்ள நெப்போலியனின் இல்லத்தில் விதார்த் குடும்பம் நான்கு நாட்கள் தங்கி இருந்தது, இரு குடும்பங்களுக்குமான நினைவில் நிற்கும் ஒரு இனிய அனுபவமாக அமைந்ததாக கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, நடிகர் விதார்த், நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிடம் மிகவும் அன்பாகவும் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை நெப்போலியன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில், தனுஷின் மனைவியைப் பற்றி பேசும்போது, "உங்களுடைய மனைவி அருமையாக சமைக்கிறாங்க" என்று விதார்த் மனதார பாராட்டினார்.
மேலும், நடிகர் விதார்த், நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தயாரிக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாகவும், அந்த சந்திப்பின்போது பேசி இருந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நடந்ததே விதார்த்தத்தின் மகளுக்காக தானாம், நெப்போலியனின் மகன் தனுஷை நேரில் பார்ப்பதற்கு நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு வந்ததாகவும், இப்போது அந்த ஆசை நிறைவேறியதாகவும் விதார்த் மற்றும் அவரது மனைவி மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
நன்றி மறக்காத நட்பு
நடிகர் விதார்த் ஏற்கனவே ஒரு பேட்டியில் தான் நெப்போலியன் தனக்கு செய்த உதவி குறித்து பேசி இருந்தார். அதாவது நெப்போலியன் உடன் ஒரு படத்தில் தான் நடிக்கும் போது தன்னுடைய மனைவி குழந்தைக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று சொன்னதாகவும், அந்த நேரத்தில் தன்னிடம் பணம் எதுவும் இல்லாமல் இருந்தபோது நெப்போலியன் சிலர் மூலமாக தன்னுடைய குழந்தைக்கு பீஸ் கட்டியதாகவும் சொல்லியிருந்தார்.
நெப்போலியன் குடும்பம்
அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன், தனது மகன், மருமகள் மற்றும் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர்களின் இல்லம், தமிழ்த் திரையுலக நண்பர்களுக்கான ஒரு அன்பான சந்திப்பு இடமாகவே மாறியுள்ளது.
நாஷ்வில்லில் இருந்து நியூயார்க் பயணத்தை தொடரும் முன், விதார்த் குடும்பம் நெப்போலியன் இல்லத்தில் இருந்து பிரியாவிடை பெற்ற அந்த தருணம், அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு இனிய நினைவாக அமைந்ததாகவும் நெப்போலியன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications