செமையா இருக்கீங்க மாமியார்.. வெட்கத்தில் புன்னகை பூத்த செந்தில் குமாரி!
சென்னை: சீரியலில் மாமியார் ரோலில் பார்த்து வந்த செந்தில்குமாரியை நிஜத்தில் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.
மீனாட்சியின் மாமியாராக நடித்தவர் இப்போ மாடர்ன் உடையில் மின்னுவதைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் லைக் பட்டன் தெறிக்கிறதாம்.
நடிக்கும்போது கேரக்டராக மாறலாம் ஆனால் நடிப்புக்காக இப்படி எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு பார்த்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக புலம்பி வருகிறார்கள்.

இளமை கொஞ்சம் அள்ளுதே
வயசு ஆனாலும் அழகு குறையலையேனு ஒரு சிலரை பார்த்தால் தான் சொல்லத் தோணும். அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் மாமியாராக நடித்த செந்தில்குமாரியும் இருக்கிறார். இவரை சீரியலில் மாமியார் ஆகவும் அம்மா கேரக்டரில் பார்த்து வந்த ரசிகர்கள் இப்போ இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட போஸ்ட் பார்த்து செம ஷாக் ஆகி இருக்கின்றனர்.

மனதில் நிற்கும் முகம்
இவர் சீரியலில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் தன்னுடைய அழகான தமிழ் உச்சரிப்பால் கிராமத்து வாசத்தை காட்டி வருகிறார். இவருடைய வளவள பேச்சை பார்த்து பலர் ரசித்து வந்தாலும் இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு பட்ட கஷ்டங்களை தெரிந்த பிறகு இவருக்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். வீட்டில் நடிப்பதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் ஒவ்வொரு இடத்திலும் போராடி இப்போ ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார்.

நல்ல மாமியார் தான்
முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் டீச்சராக வந்து பள்ளிக் குழந்தைகளை மட்டுமல்லாமல் வீட்டு பெற்றோர்களின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். முதல் சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தான் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் தெய்வானை கேரக்டரில் சிறந்த மாமியாருக்கான விருதையும் வாங்கி இருக்கிறார் .

கொஞ்சம் கோவக்கார அம்மாதான்
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும் முதன்முதலாக அறிமுகமான பசங்க திரைப்படம் வேற லெவல் தான். அந்த திரைப்படத்தில் இவர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மனதில் நன்றாக பதிந்து விட்டது. இந்தப் படத்திற்கும் இவருக்கு விருது கிடைத்திருக்கிறது.

அவரா இவரு
இப்படி நடிக்கும் படங்கள் சீரியல்களில் எல்லாவற்றிலுமே புடவையிலும் வயதான தோற்றத்திலும் இருந்த இவர் இப்போ எனக்கு அவ்ளோ வயசு ஆகல நான் இளமைதான்னு படம் போட்டு காட்டி இருக்கிறார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் பனியனில் ப்ரீ ஹேரேடு மயக்கும் பார்வையில் பார்ப்பவர்களை விழி அசைக்க மறக்க வைத்து விட்டார்.
இவருடைய போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளில் தீப்பொறிகளை பறக்க விட்டு வருகின்றனர்.

செம பர்பாமென்ஸ் தான்
அதுவும் கதாநாயகிகளுக்கு போட்டியாக இவர் கலக்கலாக மாடர்ன் உடையில் களமிறங்கி இருப்பதைப் பார்த்து இதுதான் மார்டன் அம்மாவா என்று சிலர் கலாய்த்து தள்ளினாலும் வேற லெவல் தான் நீங்க என்று இவருடைய திறமைக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனாலும் சில குறும்பர்கள் ஐ லவ் யுவர் வாய்ஸ் என்றும் அழகான சிண்ட்ரெல்லா நீங்கதான் என்று மொலம் மொலமா அளந்துவிட்டு வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications