"கீழ்த்தரமான மனிதர்கள்”வாணி போஜன் வெளியிட்ட பதிவு..இது யாருக்கான பதிலடி என்று தெரிகிறதா.!??
சென்னை: நடிகை வாணி போஜன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுப்பாகி சில வார்த்தைகளை வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு சில நாட்களாகவே வாணி போஜனை பற்றி சமூக வலைத்தளத்தில் பரவி வரும் கருத்துகளுக்கு அவர் பதில் சொல்லி இருக்கிறாரா என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
தன்னைப் பற்றி தப்பாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனுக்கு தான் இந்த அறிவுரையா? என்று நெட்டிசன்கள் கோர்த்து விட்டிருக்கிறார்கள்.

தெய்வமகள் சத்தியா
ஒரு மாடல் ஆக அறிமுகமான வாணி போஜன் பல விளம்பரங்களில் நடித்து சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருந்தார். அதுவும் சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் சீரியல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. நெடுந்தொடரான தெய்வமகள் சீரியலில் சத்யா கேரக்டரில் இவருடைய அறிமுகம் வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த சீரியலில் இவருக்கும் அவருடைய ஜோடியாக நடித்த கிருஷ்ணாவுக்கும் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் இருந்ததாலே இவருக்கு அதிக அளவில் ஆதரவு கிடைத்து வந்தது.

சின்னத்திரை நயன்தாரா
முதல் சீரியலில் வாணி போஜன் எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவில் இவருக்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் கூட தெய்வமகள் சீரியல் போல பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. ஆனால் தெய்வமகள் சீரியல் தான் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டத்தை வாங்கி கொடுத்திருந்தது. சீரியல்கள் பக்கமே தலையை கட்டிக் கொண்டிருந்த வாணி போஜன் சமூக வலைத்தளத்தில் படும் ஆக்டிவாக இருந்து வந்தார்

ரசிகர்களின் மீரா அக்கா
தற்போது பல திரைப்படங்களிலும், ஷார்ட் பிலிம் களிலும் வாணி போஜன் நடித்து வருகிறார். அதனால் சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு வெள்ளித்திரையை கெட்டியாக பிடித்து விட்டார். இவருடைய ரசிகர்கள் பலர் இவரை செல்லமாக "மீரா அக்கா" என்று அழைத்து வருகின்றனர். ஓ மை கடவுளே எனும் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் இளம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து பூட்டு, மலேசியா முதல் மறதி நோய் வரை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெப் சீரியல்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் இருந்து வருவதாக கூறி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் பதில்
ஒரு சில நாட்களாகவே நடிகர் பயில்வான் ரங்கநாதன் வாணி போஜனை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதில் வாணி போஜன் நடிகர் ஒருவருடன் லிவ்விங் லைப்பில் இருப்பதாகவும், தற்போது அவரை கழட்டி விட்டு விட்டதாகவும் பேசியதாக செய்திகள் பரவி இருக்கிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வாணி போஜன், "வதந்திகள் பரவுவதை என்னால் தடுக்க முடியாது. அவற்றை நம்பும் மக்களின் மனதை என்னால் உண்மையில் மாற்ற முடியாது, என்னை பற்றி பேச எதுவும் இல்லாத இந்த கீழ்த்தரமான மனிதர்களைப் பார்த்து சிரிக்க மட்டுமே என்னால் முடியும்..."என்று பதிவிட்டு இருக்கிறதைப் பார்த்த ரசிகர்கள் இது பயில்வானுக்கு தக்க பதிலடியா? என்று கேட்டு வருகிறார்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications