நடிகை திவ்யாவுக்கு ஆதரவாக அர்னாவ் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகை..இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?
சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய கணவரான அர்னாவ் மீது பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
திவ்யா கூறியது எல்லாமே போய் என்று அர்னாவ்வும் திவ்யா மீது குற்ற சாட்டுகளை கூறியிருக்கிறார்.
நடிகை இந்த நிலையில் திவ்யாவிற்கு ஆதரவாக அர்னாவ்வுடன் நடிக்கும் நடிகை ஒருவர் அர்னாவ் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயலை பற்றி பரபரப்பான தகவல்களை கூறியிருக்கிறார்.

காதல் திருமணம்
கேளடி கண்மணி சீரியலில் நடித்து வந்த திவ்யாவுக்கும் அவரோடு நடித்த நடிகர் அர்னாவ்வுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் ஐந்து வருடங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யா முஸ்லிம் மதத்திற்கு மாறி அர்னாவ்வை திருமணம் செய்து இருக்கிறார். அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

திவ்யாவின் குற்றசாட்டு
திருமணத்திற்கு முன்புவரைக்கும் இவர்களுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகத்தான் சென்று கொண்டிருந்ததாம். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தாலும் அதை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் திருமணம் ஆன பிறகு தான் இவர்களுக்குள் பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. தற்போது திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நிலையில அர்னாவ் முன்பு மாதிரி சரியாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் திவ்யா மற்றும் அர்னாவ் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சீரியலில் அர்னாவ்வுடன் நடிக்கும் நடிகைக்கும் இவருக்கும் தப்பான உறவு இருப்பதாக திவ்யா குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

நடிகை கூறிய சாட்சி
அர்னாவ் தன்னோடு நடிக்கும் நடிகையோடு நெருங்கி பழகுவதால் தன்னை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார் என்று திவ்யா குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த நிலையில் திவ்யா கூறுவது உண்மைதான் ஷூட்டிக் ஸ்பாட்டில் அர்னாவ் மற்றும் அவரோடு செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் அன்ஷிதா இருவரும் நெருக்கமாக பழகி வருவதும் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதும் நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என்று அர்னாவ்வோடு நடிக்கும் நடிகை கூறி இருக்கிறார்

சூட்டிங் ஸ்பாட் சேட்டை
அர்னாவ் பல நேரங்களில் செல்லமா சீரியல் கதாநாயகி அன்ஷிதா உடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து யாரையோ வெறுப்பேத்துவது போல செய்து கொண்டிருப்பார் ஆனால் அது திவ்யா என்று எங்களுக்கு தெரியாது. சூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருக்கும் போது கேரவன் வேணுகுள்ளே இவர்கள் அடித்த லூட்டி சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். அதனால் திவ்யா மீது எந்த தவறும் கிடையாது. திவ்யாவே எனக்கு முன்பு தெரியாது ஆனால் அர்னாவ் மட்டும் தான் நன்றாக தெரியும். அர்னாவ் உடன் நான் கல்யாணப்பரிசு சீரியலில் நடித்திருக்கிறேன். அப்போது இருந்து அவரைப் பற்றி எனக்கு தெரியும். இதனால் இதைக் குறித்து இன்ஸ்டாகிராமில் அர்னாவ்விடம் மெசேஜ் பண்ணி பேசினேன். ஆனால் அவர் செய்வது எனக்கு சரி என்று தெரியவில்லை. அதனால் தான் தற்போது உண்மைகளை எல்லாம் கூறி இருக்கிறேன். திவ்யா செல்வது எல்லாமே உண்மைதான் என்பதை தற்போது அர்னாவ் உடன் நடிக்கும் நடிகை கூறி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications