மகனைக் குறித்து உருக்கமாக பேசிய கனிஹா... இவ்வளவு கஷ்டத்தையும் மறைத்து..!! ரசிகர்களின் ஆறுதல்கள்
சென்னை: எதிர் நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கனிஹா தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்களை பற்றி பேசிய வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் என்று அனைவரும் சொல்வார்கள் ஆனால் அதை அனுபவித்து உணர்வுபூர்வமான வலியை பற்றி கனிஹா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
தான் கஷ்டப்பட்டு பெற்ற எடுத்த மகனுக்கு இதயத்தில் பிரச்சனை என்பதை தெரிந்து கொண்ட கனிஹா முதல் முறையாக குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

சீரியலில் அறிமுகம்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிஹா, இதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த கனிஹா திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறந்த பிறகு சிறிது நாட்கள் நடிப்பிற்கு லீவ் விட்டிருந்தார். தற்போது மீண்டும் நடிப்பை தொடங்கலாம் என்று நினைத்து இருந்தவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் கேரக்டரின முக்கியத்துவத்தை பார்த்து சீரியலில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் மனைவியாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த கனிஹா இப்படி இவ்வளவு வயசு வித்தியாசம் இருப்பவருக்கு ஜோடியாக நடிக்க தொடங்கி விட்டார் என்று தங்களது ஆதங்களை கமெண்ட் களில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கனிஹா பேசிய வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் தனது ஒரே மகனை குறித்த உருக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து எந்த பிரச்சனையும் ஏற்பட்டதே இல்லையாம். அந்தந்த மாதத்தில் எந்த மாதிரி சிம்டம்ஸ் இருக்க வேண்டுமோ அது எல்லாமே சரியாகத்தான் இருந்திருக்கிறது.

மருத்துவர் கூறிய அதிர்ச்சி செய்தி
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எல்லா கர்ப்பிணிகளும் செய்கின்ற மாதிரிதான் இவரும் ஸ்கேன் எல்லாம் செய்திருந்தாராம். ஆனால் அப்போது கூட இவருக்கு தனது குழந்தையை பற்றி எந்த ஒரு எதிர்மறையான தகவல்களையும் தெரிவிக்கவில்லையாம்? ஆனால் குழந்தை பிறந்த பிறகு இவரிடம் குழந்தையை காட்டவே இல்லையாம். குழந்தை பிறந்து பல மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவர் வந்து திடீரென்று இவர் அருகில் ஒரு நோட்டு புத்தகத்தில் ஹார்ட் படத்தை வரைந்து இவரிடம் காட்டி உங்கள், குழந்தையின் ஹார்ட்டில் பிரச்சனை இருக்கிறது, இன்று இரவு வரை அவன் தாங்க மாட்டான் என்று கூறி இருந்தாராம். அப்போது ஹனிகாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாழ்க்கை இருண்டது போல இருந்ததாம்.

ரசிகர்களின் ஆறுதல்
குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரத்தில் இவரால் எழுந்து கூட இருக்க முடியாத நிலையிலும், தனது மகனைப் பற்றிய கூறிய தகவலால் என்ன பண்ணுகிறோம் என்பதை தெரியாமல் இவர் திடீரென்று நடந்து அப்படியே மகனைப் பார்க்க அந்த அறைக்கு சென்று விட்டாராம். அங்கு ஒரு குட்டி குழந்தையின் பக்கத்தில் சுற்றி நூடுல்ஸ் போல பல ட்யூப்புகள் மாற்றப்பட்டிருந்ததாம். இதை பார்த்ததும் இவருக்கு கதறி அழுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லையாம். அந்த நேரத்தில் இவர் அதிகமாக நம்பும் பாபாவின் மீது கவலையை எல்லாம் தூக்கி வைத்து விட்டாராம். அதற்குப் பிறகு சுமார் 7 மணி நேரமாக அவருடைய குழந்தைக்கு ஆபரேஷன் நடைபெற்றதாம். பிறந்த குழந்தைக்கு ஒரு ஸ்ட்ராபெரி அளவில் இதயமும் மயிர் இலையில் தான் டியூப் எல்லாம் இருந்ததாம்!! அதில் ஏழு மணி நேரம் ஆப்ரேஷன் செய்து மகனை பிழைக்க வைத்து விட்டார்களாம். தற்போது வரைக்கும் கனிஹாவின் மகனை கனிஹா கண்ணும் கருத்துமாக பார்த்து வருவதாகவும் அவன் தான் தன்னுடைய உலகம் என்றும் கூறி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். விரைவில் பூரண நலம் பெற்று விடுவார் என்று இவருக்கு ரசிகர்கள் தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications