
சீரியல் முடிவிற்கு பிறகு ரோஜா கதாநாயகி வெளியிட்ட புகைப்படம்.. உருக்கமான வார்த்தைகள்.. குவியும் ஆதரவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்கரி தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய வருத்தத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆயிரம் எபிசோடுகளை தாண்டி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் திடீரென முடிக்கப்பட்டதால் பிரியங்கா நல்கரி தமிழ் ரசிகர்களை அதிகமாக மிஸ் பண்ணுவதாக கூறியிருக்கிறார்.
நடிகை கௌசல்யாவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா? பலருக்கும் தெரியாத மற்றொரு பக்கம்

மிஸ் பண்ணும் ரசிகர்கள்
தற்போது உள்ள தமிழ் நடிகைகளே தமிழில் பேச தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது ஹைதராபாத்தில் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக தனக்கு அங்கீகாரம் கிடைத்த இடத்தை நன்றாக பழகிக் கொண்டேன் என தன்னுடைய செல்லமான தமிழினால் ரசிகர்களையும், இளைஞர்களையும் வசியப்படுத்தி வைத்திருக்கும் சன்டிவி ரோஜா சீரியல் கதாநாயகியான பிரியங்கா நல்கரி தற்போது அந்த சீரியல் முடிவடைந்த பிறகு முதல் முறையாக அந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகைகளோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதை குறித்து ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

குடும்பத்திற்காக தியாகம்
தன்னுடைய எந்த கஷ்டத்தையுமே வெளியே காட்டாத பிரியங்கா நல்கரி இவருடைய வீட்டில் மூத்த பெண் ஸ்கூல் படிக்கும்போதே பைனான்ஸ் ஆக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆனாலும் இவருக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் என்பதினால் இவரோட அம்மா இவரை டான்ஸ் ஷோவில் கலந்துக்க வைத்திருக்கிறார். அதனால் இவருக்கு கிடைத்த பணத்தில் தான் இவருடைய படிப்பு செலவிற்கு செலவழித்து இருக்கிறார். இவருடைய இரு தங்கைகளின் படிப்புக்காக தன்னுடைய படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார். சின்ன வயதிலேயே நிறைய ஸ்டேஜ் ஷோவில் கலந்து கொண்டிருந்ததால் அதன் மூலமாக நடிப்பிற்கு வந்திருக்கிறார். தற்போது சமீபத்தில் தான் அவருடைய சகோதரியின் திருமணத்தை பிரம்மாண்டமாக பிரியங்கா நடத்தி வைத்திருந்தார்.

ஆரம்பத்தில் உருவ கேலி
காலேஜ் படிக்கும் போது பிரியங்காவின் உயரத்தையும் லுக்கையும் பார்த்து பலர் கலாய்த்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது அதே உயரத்தையும், ஸ்ட்ரக்சரையும் தான் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனை நினைத்து எனக்கு இப்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று பிரியங்காவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். புசுபுசுவென உடல் அமைப்பையும் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்து இருந்த ரசிகர்களின் மத்தியில் கொழுக்கு முழுக்கு என்று இருந்தாலும் நம்ம சன் டிவி ரோஜா மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மீண்டும் விரைவில்
சீரியல் முடிவடைந்தாலும் புது சீரியலில் மீண்டும் நான் வருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் சீரியலுக்கு இவர் வந்த பிறகு தமிழ் ரசிகர்களின் ஆதரவை பார்த்த பிறகு இவருக்கு தமிழ் சீரியலை விட்டு விலகுவதற்கு மனசே வரவில்லையாம். ஆனாலும் சீரியலின் முடிவை நாம் ஏற்றுதானே செய்ய வேண்டும் என்றுதான் மனதை திடப்படுத்தி இருக்கிறாராம் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதில் சென்னையை மிஸ் பண்ணுவதாக கடற்கரையில் எடுத்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் புது சீரியலில் வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டு வருகிறார்கள்.