அண்ணனின் கிப்ட் பார்த்து ஆர்ப்பரித்த அக்ஷரா....ஆனாலும் இது வேற லெவல் தான்
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அக்ஷராவின் அண்ணன் செய்த செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது.
பாசத்தின் முன்பு எல்லாமே சிறுசுதான் என்று தற்போது அக்ஷராவும் அவருடைய அண்ணனும் நிரூபித்து இருக்கிறார்கள்.

இதனால்தான் அப்படியா
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்ற பிறகு இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் அக்ஷரா வெளியே செல்லும்போது இவ்வளவு சந்தோஷமாக சென்றாரா?? என்று அக்ஷராவின் ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்ஷராவின் அண்ணன் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தங்கையின் வருகை இவ்வளவு மகிழ்ச்சியா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டு வருகிறார்கள்.

அண்ணன், தங்கச்சி பாசம்
என்னதான் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் உறவுகளில் பாசம் எப்போதுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்பது பல நேரங்களில் என பலரும் புரிய வைத்து வருகின்றனர். அந்த மாதிரி தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருந்த அக்ஷராவும் அவருடைய அண்ணனும் நிரூபித்து இருக்கின்றனர் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். என்னதான் தமிழ் சினிமா படங்களில் அண்ணன், தங்கச்சி பாசங்களை பார்த்து இருந்தாலும் தற்போது அதை எல்லாம் ஓவர்டேக் செய்கின்ற மாதிரி இவர்கள் இருவரும் செய்துவிட்டார்கள் என்று கூறி வருகிறார்கள்.

கோபத்தால் மிரட்டல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் முதல் நாளிலிருந்து தற்போது 84வது வெளியேறி இருக்கும் அக்ஷராவுக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ஆதரவு இருந்து வருகிறது. இவர் ஒரு பிரபஞ்ச அழகியாக இருந்தாலும் வீட்டில் மிகவும் செல்லமாக வளர்ந்து உள்ளார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் இவர் போட்டி போட்டுக் கொண்டு தன்னுடைய திறமையை காட்டி பல நேரங்களில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று இருந்தாலும் ஒரு சில நேரங்களில் இவருடைய கோபத்தை காட்டி அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

யாதுமாகிய அண்ணன்
பிக்பாஸ் வீட்டிற்குள் தான் ஒரு தந்தை இல்லாத குழந்தையாக இருந்தாலும் தனது அண்ணன் தான் தனக்கு தந்தை என அடிக்கடி கூறிக் கொண்டிருந்த அக்ஷராவுக்கு தற்போது அவருடைய அண்ணன் நான் தந்தை மட்டுமல்ல அனைத்துமே என்பதை நிரூபித்திருக்கிறார். அக்ஷரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவருக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார். அக்ஷராவின் சந்தோசம்தான் எனக்கு முக்கியம் என்று இவர் செய்த செயல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அண்ணன் வாங்கி கொடுத்த காரில் ஒய்யாரமாக அமர்ந்தபடி அக்ஷரா அப்படியே ரவுண்ட் அடிச்சி அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் தட்டி விட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications