பிக்பாஸ் வீட்டிற்குள் தான் கத்துகிட்ட விஷயம் இதுதான்...அக்ஷராவின் அசத்தலான பேச்சு
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட அக்ஷரா ரெட்டி அந்த நிகழ்ச்சியை பற்றி கூறியிருக்கிறார்.
அக்ஷரா ரெட்டி தான் இதுவரைக்கும் செய்யாததை முதல்முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் தான் செய்துள்ளதாக கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட அக்ஷரா ரெட்டி அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறியிருக்கிறார் இந்த நிகழ்ச்சியில் இவர் பாதியில் வெளியேறி இருந்தாலும், ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் அறிமுகமாகும் போது அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.இவர் ஒரு மாடல் அழகியாக இருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சி மூலமாகவே அதிகமான ரசிகர்களை பெற்று இருக்கிறார்.

அதிகரித்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அக்ஷரா ரெட்டிக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதுகூட இவர் பலமுறை எலிமினேஷன் இருந்தாலும் இவருக்காக பலர் முறை ரசிகர்கள் போட்டி போட்டு வாக்கு செலுத்தி சேவ் செய்திருக்கின்றனர். பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும், அதில் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்திருந்தது. அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் பல நேரங்களில் அழுது கொண்டே இருந்தாலும், போட்டிகளில் இவருடைய பர்பாமன்ஸ் வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வீட்டின் செல்லப் பிள்ளை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் கூட அக்ஷரா ரெட்டி வீட்டில் ஒரு செல்லமான பெண் என்பது அனைவருக்கும் தெரிந்து இருந்தது. அவருடைய தந்தை இறப்பிற்குப் பிறகு அவருடைய தாய் மற்றும் அண்ணனின் அரவணைப்பில் தான் இவர் வளர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் இவர் மீது அன்பைப் பொழிந்து இருந்ததால் இவர் வெளி உலக அறிவு இருந்தாலும் அதிகமாக யாரிடமும் எந்த வேலையும் செய்யாமல் இருந்திருந்தால் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் தன்னுடைய கேரக்டரை முழுமையாக மாற்றி இருக்கிறாராம். பல நேரங்களில் இவருக்கு வரும் கோபம் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு குறைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கற்றுக் கொண்ட திறமை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பு அக்ஷரா ரெட்டி ஒருமுறைகூட கிச்சன் பக்கமே செஞ்சதில்லையாம். சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாத இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் என்பதற்காகவும், அங்கே வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் இவர் சமையலில் அணியில் கலந்துகொண்டு அனைவருக்கும் சமையல் செய்து கொடுத்திருக்கிறார். அதுதான் அந்த வீட்டில் நான் கற்றுக்கொண்ட ஒரு திறமை என்று கூறியிருக்கிறார். இவர் ஒருமுறை தோசை சுட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தது கூட இவருடைய அண்ணன் மற்றும் அம்மாவிற்கு வியப்பாக இருந்தது என்று கூறியிருக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications