அண்ணாச்சியின் அடுத்த டார்கெட் தாமரை தானா??அப்போ இந்த வாரம் வெளியேற்றம்!!??
சென்னை: தாமரையை குறைகூற தொடங்கிய அண்ணாச்சியை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் அவர் யாருடன் வம்பு இழுக்கிறாரோ அவர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் தாமரையா என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
தாமரைக்கு கட்டடத்தை கட்ட தொடங்கிய அண்ணாச்சிக்கு ஆதரவாக ராஜுவும் வந்து அமர்ந்து உள்ளார்.

கூட்டணி தொடர்ந்து வருகிறது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் ஒதுக்கப்படுவார்கள். ஒரு சில போட்டியாளர்கள் குழுவாக சேர்ந்து விளையாடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போதைய சீசனில் கூட ஒரு சில போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடி வருகின்றனர். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமலும் அவர்களுக்கு என்று ஒரு பிரச்சனை வந்தால் அதிலிருந்து நைசாக கழண்டு கொள்வதிலும் கவனமாக இருக்கின்றனர். இந்த சீசனில் அப்படி இருப்பவர்களில் அண்ணாச்சி மற்றும் ராஜுவும் ஒருவர்.

ஒன்று சேர்ந்து விளையாட்டு
ராஜு தன்னுடைய இயல்பான காமெடி திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதுபோல அண்ணாச்சி ஏற்கனவே ஒரு நகைச்சுவை நடிகராக இருந்தாலும் பலருக்கும் பரிச்சயமானவர். அதனால் அவருக்கும் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருவதைப் பார்த்து பலர் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் பலர் இவர்களுக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடுவதே பலமுறை இவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.

பெண் போட்டியாளர்களின் குற்றசாட்டு
அண்ணாச்சி காமெடியாக சொல்கிறேன் என்று தன்னுடைய கருத்தை அடுத்தவர்களின் மீது திணிக்க பார்க்கிறார் என்று பலமுறை ரசிகர்கள் இவர் மீது குறை கூறி வருகின்றனர். அதுவும் சக பெண் போட்டியாளர்களின் கருத்துக்களை கேட்காமல் மட்டம் தட்டும் விதமாகத்தான் நடந்து வருகிறார் என்று பலருடைய கருத்தாக இருக்கும் நிலையில் இவர் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில போட்டியாளர்களை டார்கெட் செய்து கொண்டிருக்கிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர். அதுபோலத்தான் ஒவ்வொரு வாரமும் இவரிடம் பகைத்துக் கொள்ளும் போட்டியாளர்கள் வரிசையாக வெளியேறி வருகின்றனர்.

இந்த வாரம் தாமரையா?
சின்னப்பொண்ணு, சுருதி கடந்த வாரம் வெளியேறிய இசைவாணி உட்பட இவரிடம் பிரச்சனை செய்பவர்கள் எல்லாம் வரிசையாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த வாரத்தில் தாமரையிடம் இவர் அதிகமாக முட்டி கொண்டிருப்பதால் அவர்தான் வெளியேருவாரா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நேற்றைய எபிசோட்டில் ராஜுவும், அண்ணாச்சியும் அமர்ந்துகொண்டு தாமரை எல்லாமே தெரிந்தாலும் புரியவில்லை என கூறி அனைவரையும் ஏமாற்றி வருகிறார் என்று ஆதாரத்தோடு பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் அண்ணாச்சியின் அடுத்தகட்டம் தாமரை தானா??என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications