மீண்டும் சர்வைவர் ஷோவை ஆரம்பித்த அர்ஜுன்... அம்மாடி இவ்வளவு வேலை பண்ணி இருக்காரா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சி முடிவடைந்ததால் அர்ஜுன் அடுத்த வேலையை தொடங்கிவிட்டார்.

Recommended Video

    மீண்டும் சர்வைவர் ஷோவை ஆரம்பித்த அர்ஜுன்... அம்மாடி இவ்வளவு வேலை பண்ணி இருக்காரா??

    மாஸாக என்ட்ரி கொடுத்து வீட்டில் உள்ளவர்களை இவர் பாடாய்படுத்துவதை பார்த்து ரசிகர்கள் வாய்விட்டு சிரித்து வருகிறார்.

    தொகுப்பாளராக அறிமுகம்

    தொகுப்பாளராக அறிமுகம்

    நடிகர் அர்ஜுன் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஆக்சன் கிங் தான். இவருடைய மிரட்டலான அதிரடி காட்சிகளை பார்த்து இவருக்கு ரசிகர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். இவருடைய திறமைக்கு தன்னுடைய பல முகங்களை ரசிகர்களுக்கு காட்டி இருந்தாலும் தற்போது தொகுப்பாளராக கலக்கி கொண்டு வருகிறார். இவர் தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தியை கேட்டதும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அதை நாங்கள் தொடர்ந்து பார்ப்போம் என்று பல ரசிகர்கள் முடிவெடுத்து விட்டார்கள். அந்த மாதிரிதான் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவை ஆக்சன் கிங் தொகுத்து வழங்கியுள்ளார்.

    எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்

    எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்

    முதல் முறையாக தொகுப்பாளராக அறிமுகமான அர்ஜுன் தன்னுடைய மிரட்டலான மற்றும் பாசமான இரண்டும் கலந்த கேரக்டரை வெளிக்காட்டி ரியாலிட்டி ஷோவில் இப்படியும் வழி நடத்தலாம் என்று புதுவிதமாக அனைவருக்கும் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். போட்டியாளர்கள் தவறு செய்யும் நேரத்தில் அவர்களை கண்டிப்பதும் அவர்கள் திறமையை காட்டும் போது அவர்களின் தோளைத் தட்டிக் கொடுப்பதும் அர்ஜுனிடம் இருந்து நிறைய பேர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மொட்டை மாடியில் சர்வைவர்

    மொட்டை மாடியில் சர்வைவர்

    அர்ஜுன் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தாலும் உண்மையான ரியாலிட்டி ஷோவில் இவருடைய கேரக்டரை பார்த்து மகிழ்ந்து போன ரசிகர்கள் அடுத்த சர்வைவர் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய வீட்டில் இவருக்கு கொடுத்த திடீர் சர்ப்ரைஸ் பார்த்து இவர் மிரண்டு போயிருக்கிறார். சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருடைய மொட்டைமாடியில் சர்வைவர் நிகழ்ச்சியை குடும்ப உறுப்பினர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

    மெர்சல் பண்ணிட்டீங்களே!

    மெர்சல் பண்ணிட்டீங்களே!

    சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்த இவருடைய மறக்க முடியாத நினைவுகளை கூறுவதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா?? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அந்த அளவிற்கு தத்ரூபமாக பல இடங்களில் பெயிண்டிங் செய்தும் நெருப்பு வைத்தும் காட்டை நினைவு படுத்தும் விதமாகவும் சர்வைவர் நிகழ்ச்சியை தன் முன்னாடி கொண்டுவரும் விதமாகவும் டாஸ்க்களும் வைக்கப்பட்டிருந்தது. இதில் தொகுப்பாளராக அர்ஜுன் தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களாக மாறி இருக்கின்றனர். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அது பல லைக்குகளையும் பெற்று அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+