அமீரால் பெருமைப்பட்ட அவருடைய குடும்பம்..காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் வாழ்த்து
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான அமீருடைய குடும்பம் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அமீரால் பெருமைப்பட்ட தருணத்தை பகிர்ந்து அவருடைய வளர்ப்பு குடும்பம் அமீருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறது.
அமீரின் குடும்பத்தோடு சேர்த்த அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
நடன ஆசிரியராக தன்னுடைய பணியை தொடங்கிய அமீர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் பலருக்கும் பரீட்சயமான நபராக மாறி இருக்கிறார். இதற்கு முன்புவரைக்கும் அமீர் திரைக்குப் பின்னாடி இருந்து பலரையும் ஆட வைத்துக் கொண்டிருந்தாலும் தற்போது திரைக்கு முன்பு தன்னுடைய திறமையை காட்டி அனைவரையும் வியப்படைய செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எவ்வளவு சோதனைகளை கடந்து வந்திருந்தாலும் தற்போது அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனுக்கு பிறகு பலருடைய பாராட்டல்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

உதவிய அஷ்ரப் குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான அமீர் ஆரம்பத்தில் பலருக்கும் புது முகமாகத்தான் இருந்து வந்துள்ளார். அதற்குப் பிறகுதான் இவருடைய சோகமான பின்னணி கதையைக் கேட்ட ரசிகர்கள் பலர் இவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று ஆறுதல்களையும், ஆதரவினையும் தெரிவித்து வந்தனர். ஆனால் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் தனி ஆளாக அமீர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது அவருக்கு கை கொடுத்து உதவிய குடும்பம் தான் அஷ்ரப் குடும்பம். அமீர் இருக்க இடம் இல்லாத போது தன்னுடைய வீட்டிலேயே அஷ்ரப் அமீருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து அமீரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.

எல்லை இல்லா மகிழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனக்கு உதவிய குடும்பத்தை பற்றி கூறிய பிறகு தான் பலருக்கும் அஷ்ரப் என்பவர் யார்? அவர் செய்த உதவிகள் என்ன என்பது தெரிய வந்தது. அமீரை அஷ்ரப் குடும்பத்தில் சேர்த்ததால் குடும்பத்தில் பலரும் அஷ்ரப்பை ஏற்றுக் கொள்ளாமல் விலகி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலர் அஷ்ரப்பை புரிந்து கொண்டு பேச தொடங்கி இருப்பதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அமீரின் வெற்றியில் ஒவ்வொரு இடத்திலும் சந்தோஷப்படும் அஷ்ரப் குடும்பம் தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் அமீர் வெற்றி பெற்றதற்கு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

பெருமிதத்தில் அமீர் குடும்பம்
பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் அமீர் பாவனியோடு இணைந்து நடனமாடி வந்தார். இதில் இறுதி நிலையில், அமீரின் முதல் மாணவர்களான ஆயிஷா மற்றும் அல்ஹினா இணைந்து நடனமாடி இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அமீர் அணியினர் வெற்றி பெற்று இருந்தினர். இந்த நிலையில் அமீர் பாவனி மற்றும் ரம்யா கிருஷ்ணனோடு அஷ்ரப் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு நான் போற்றும் தருணம் என்று கேப்ஷனோடு அஷ்ரப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதில் ஒரு சில ரசிகர்கள் இந்த கேப்ஷனுக்கு அமீர் மற்றும் பாவனி இருவரையும் டேக் செய்திருப்பதால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications