For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Ayudha ezhuthu serial: ஒரு சப் கலெக்டருக்கு படிச்சவனா படிக்காதவனான்னு தெரியாதா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப்கலெக்டர் இந்திராவுக்கு சக்தி படித்தவனா, படிக்காதவனா என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் ஏமாந்து போறாங்களே.

சப்கலெக்டர் வேலை என்றால் சும்மாவா? சக்தி ஏகத்துக்கும் படித்தவன், லண்டன் ரிட்டர்ன் என்றெல்லாம் பொய் சொல்றான்.அதையும் நம்பி ஏமாந்து அவனுடன் நட்பாக பழகும் இந்திராவை என்னவென்று சொல்வது?

சக்தி படிக்காதவன், அந்த ஊரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காளி அம்மாவின் மகன். இதையும் தெரிந்துக் கொள்ளாத ஒரு பெண்ணை சப் கலெக்டர் என்று எப்படி சொல்வது?

பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே

ரயிலில் வந்து இறங்கும் இந்திரா, ஜீப்புடன் அங்கு நின்று இருந்த சக்தியை, வண்டி ஊருக்குள்ள போகுமான்னு கேட்ட முதல் நாளே இந்திரா அவன் மனதில் இடம்பிடித்து விடுகிறான்.இந்திராவும், அன்று முதலே சக்தியுடன் நட்பாக பழக்க ஆரம்பிக்கிறாள். போகப் போக அவன் படிப்பு பற்றி சொன்ன பொய்யை நம்பி,அவனை கிட்டத்தட்ட காதலிக்கும் நிலைக்கு வந்துடறா. இவள்தான் இப்படி என்றால், இந்திரா குடும்பத்தினர் இவளுக்கு ஓரு படி மேல போயி, படிப்பில் சக்திதான் இந்திராவுக்கு ஏத்த ஜோடின்னு பேசிக்க ஆரம்பிச்சுடறாங்க.

நேரத்தை சக்தியுடன்

நேரத்தை சக்தியுடன்

அதிக நேரத்தை சக்தியுடன் செலவழிக்கும் இந்திராவுக்கு, சக்தியின் அப்பாவும் நட்பாகிடறார். ஒரு நாள் இருவரும் இந்திராவின் வீட்டுக்கு வந்திருக்க, மீட்டிங்கை கேன்சல் செய்துடறா இந்திரா. அப்போது அவளுக்கு போன் வர அதை கட் செய்துகொண்டே இருக்கும் இந்திராவிடம் யாரும்மா போன்லேன்னு கேட்கறார் சக்தியின் அப்பா. அவன் என் கூட படிச்சவன்னு சொல்றா இந்திரா.

போனை எடுத்து பேசலாமே

போனை எடுத்து பேசலாமே

ஃபிரண்டுதானேம்மா எடுத்து பேசலாம்லன்னு சக்தியின் அப்பா கேட்க, அவன் என்னை லவ் பண்றான் அங்கிள்.. டார்ச்சர் பண்ணுவான்னு சொல்ல, நீங்களும் அவனை லவ் பண்றீங்களான்னு கேட்கறார் சக்தியின் அப்பா. இல்லை.. அங்கிள். அவன்தான் இப்படி போன் செய்து தொந்திரவு பண்றான்னு இந்திரா சொல்ல, இனிமேல் அவன் போன் வராதபடி நான் பேசிடவான்னு இவர் கேட்க, சரி அங்கிள்னு இந்திரா சொல்றா..

நான் மாப்பிள்ளை

நான் மாப்பிள்ளை

மறுபடியும் போன் அடிக்க, இந்திராகூட பேசணும்னு சொல்றான் அவர் .அவங்க மீட்டிங்கில் இருக்காங்க. நான் அவங்க வருங்கால மாமனார்னு சொல்ல, சக்தி இந்திராவை பார்க்கிறான். இந்திரா அங்கிளைப் பார்க்க, சும்மான்னு சொல்லிட்டு, போனில் லவ் மேரேஜ்தான் கண்ணு.. நாங்களும் ஒப்புக்கிட்டு இப்போ கல்யாணம் நடக்க போகுது. இருங்க மாப்பிள்ளைக்கிட்ட குடுக்கறேன்னு சக்திகிட்டே குடுக்கறார். அவன் வாங்கி நான் வரும் கால மாப்பிள்ளை பேசறேன்னு சொல்லிட்டு, கண்டதும் காதல்னு சொல்றான் சக்தி.

இதெல்லாம் பார்த்துக்கிட்டு ஒரு சப்கலெக்டர் கம்முன்னு உட்கார்ந்து இருக்காங்க.என்னங்க இது?

English summary
In Vijay TV's Ayudha ezhuthu Serial, Subcollector Indra is not able to find out whether he is educated or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X