முருகனால் கண் முன்னே நடந்த அதிசயம்! இதை எதிர்பார்க்கல.. கண்ணீருடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் உருக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாக்கியலட்சுமி' சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்த நடிகர் விகாஷ் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கண்கலங்கி பேசும் காட்சிகள் பலரையும் உருக்கி விட்டது. பொதுவாகவே விகாஷ் ஒரு தீவிர முருக பக்தன் என்பது அவரை பாலோ பண்ணும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான், அவர் இப்போது முருகர் பற்றி மனம் திறந்து பேசிய அனுபவங்களை கேட்டு நெகிழ்ந்து போகிறார்கள்.
அந்த வீடியோவில் விகாஷ் பேசுகையில், "இந்த வீடியோவை நான் வியூஸ், லைக்ஸ்காக போடல. உண்மையிலேயே என் வாழ்க்கையில் முருகன் அருளால் நடந்த மாற்றத்தை சொல்லணும்னு தான் போடுறேன்"னு ஆரம்பிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்ததாம். அதுக்குப் பிறகு அவருடைய குழந்தைக்கும் அதே டெங்கு வந்தது. ஒரே நேரத்துல இருவருக்கும் உடல்நிலை சரியில்லாம போனது அவரை ரொம்பவே உடைத்து போட்டதாம்.

முருகனின் அருள்
அந்த சமயத்துல ஒரு அன்பர், "நீங்க முருக பக்தன் தானே, வேல் மாறல் படிங்க. கண்டிப்பா நல்லது நடக்கும்"னு சொல்லியிருக்கிறார். மனசு ரொம்ப நொறுங்கிய நிலையில், விகாஷும் அதை முயற்சி பண்ண ஆரம்பிச்சாராம். ஆச்சர்யமா, அடுத்த நாளே அவருடைய குழந்தைக்கு உடல்நிலை சீராக ஆரம்பிச்சதாம். அதுக்குப் பிறகு தான், தன்னோட வாழ்க்கையில சின்ன சின்ன நல்ல மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சதையும் அவர் சொல்றார்.
மேலும் அவர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு விரதம் இருந்து வருவதாகவும், அது தன்னோட நெருக்கமானவர்களுக்கு தெரியும் என்றும் பகிர்ந்தார். தைப்பூசம் நாளில் விரதம் இருந்து வீட்டுக்கு வந்தப்போ, வீட்டுக் கதவு லாக் ஆகி சாவி உள்ளேயே மாட்டிக்கிட்டதாம். பிளம்பர் வந்தும் கதவை திறக்க முடியல, உடைக்க வேண்டிய நிலை வந்தப்போ அவர் மனம் உருகி முருகனை வேண்டினாராம்.

தைப்பூசம் அன்று நடந்த சம்பவம்
அப்போ தான் திடீர்னு நினைவுக்கு வந்தது - காருக்குள்ள அவருடைய குழந்தை ஒருமுறை ஸ்பேர் சாவியை வைத்திருந்தது. அதைப் பயன்படுத்தி கதவைத் திறந்தாராம். இதையும் அவர் முருகன் அருளால நடந்த ஒரு சின்ன அதிசயமா தான் பார்க்குறார்.
இதோட நின்றுருக்கல. தொடர்ந்து 48 நாட்கள் வேல் மாறல் படித்து வந்தாராம். 48வது நாள் முடிச்சு குளிச்சிட்டு வீட்டுக்குள் வந்தப்போ, வாசல்ல ஒரு பார்சல். அவர் எதிர்பார்க்காத ஒரு பரிசு அது. முன்னாடி ஒருமுறை யூடியூப்ல வேல் மாறல் பற்றி சொல்லிக்கொடுத்தவர், "நீங்க மனசார படிங்க. உங்களே கேட்காம வேல் உங்க வீட்டுக்கே வரும்"ன்னு சொல்லியிருந்தாராம்.

வீட்டுக்கு வந்த வேல்
அதே மாதிரி உண்மையிலேயே சில வேல் அவருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்ததாம். இதை சொல்லும்போது விகாஷ் ரொம்பவே நெகிழ்ந்து, "இது எல்லாம் முருகன் அருள் இல்லாம வேற என்ன?"ன்னு கண்ணீர் மல்க சொன்னார்.
இந்த வீடியோ வெளியானதும், பலரும் அதை பகிர்ந்து, "உண்மையான பக்தி என்றால் இப்படித்தான்", "உங்களுக்கு நல்லது நடக்க வாழ்த்துக்கள்"ன்னு கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். சிலர் தங்களுக்கும் இதுபோல ஆன்மிக அனுபவங்கள் இருந்ததா சொல்லி விகாஷ் வீடியோக்கு ரிப்ளை பண்றாங்க.
அய்யனார் துணை சீரியல் நடிகர்
நடிகர் விகாஷ் என்றாலே பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது 'பாக்கியலட்சுமி' சீரியலில் செழியன் கேரக்டர் தான். அந்த சீரியலில் அவருடைய நடிப்பு, கதாபாத்திரத்தின் உணர்ச்சிப் பக்கம் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான 'அண்ணா' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியலிலும் அவர் நடித்து வருகிறார்.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications