இனியாவை திட்டிய கோபி.. பாக்யாவிற்கு வரும் சந்தேகம்..ராதிகாவை பாராட்டிய தாத்தா..எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை கோபி மார்க் குறைவாக எடுத்ததற்கு திட்டியதற்கு இனியா கோபியை மிரட்டுகிறார்.
இனியா விஷயத்தில் ராதிகாவின் முடிவை கோபியின் அப்பா ஈஸ்வரமூர்த்தி பாராட்டுகிறார்.
வர்ஷினியின் செயல்களை தெரிந்து கொண்ட பாக்கியா ஈஸ்வரியின் மீதும் சந்தேகம் படுகிறார்.

மதிப்பெண் பட்டியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா அமிர்தாவுக்கு ஆறுதல் சொல்லி போனை வைக்க, அதற்கு பிறகு எழில் அங்கிருந்து கிளம்புகிறார். நான் இப்போது வீட்டிற்கு வந்தால் சரியாக இருக்காது நான் போன் செய்தால் போனை எடுங்கள் என்று அமிர்தாவிடம் கூறிவிட்டு எழில் கிளம்புகிறார். அடுத்ததாக ராதிகா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, கோபி வர அப்போது மயூ தன்னுடைய பிராக்ரஸ் ரிப்போர்ட்டை கொடுத்துட்டாங்க என சொல்லி ரேங்க் கார்ட் கொடுக்க எல்லாவற்றிலும் நல்ல மார்க் எடுத்து இருப்பதை பார்த்து கோபி பாராட்டுகிறார்.

இனியாவின் எதிர்பார்க்காத பதில்
அடுத்து இனியாவிடம் உனக்கும் மார்க் வந்திருக்கும் இல்ல என கேட்க தயக்கத்தோடு மார்க் ஷீட் எல்லாவற்றிலும் கம்மியாக எடுத்து இருப்பதை பார்த்து கோபி ஷாக் ஆகியதை பார்த்து இனியாவின் தாத்தாவும் பார்த்து எல்லாவற்றிலும் மார்க் குறைந்து இருக்கிறது என கேட்க இனியா கொஸ்டின் கஷ்டமாக இருந்தது என சொல்லி சமாளிக்க, இதையெல்லாம் ஏத்துக்க முடியாது ஒழுங்கா நீ படிக்கல, இனி போனை எல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு படிக்கிற வேலையை மட்டும் பாரு என கோபி அட்வைஸ் கொடுக்க, என்னை நீங்க திட்றீங்களா என்னை திட்டுனா நான் அந்த வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் என இனியா மிரட்டி விட்டு உள்ளே செல்கிறார்.

தாத்தாவின் கிண்டல்
ராதிகா கோபி செய்வது சரியானதுதான் நீங்கள் இங்கே திட்டினால் அங்க போய் விடுவேன் என்றும், அங்கே திட்டினாள் இங்கே போய் விடுவேன் என்றும் இனிமையாக மிரட்டிக் கொண்டு இருக்கிறாள். இது ரொம்பவே தப்பு நீங்க தண்டிக்கிறதுல தப்பு கிடையாது என சொல்லிவிட்டு உள்ளே செல்ல தாத்தா ராதிகா இதையெல்லாம் சரியாத்தான் சொல்றா பரவாயில்லை புத்திசாலியா இருக்கா ஆனாலும் உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டானு தான் தெரியல என கோபியை நக்கல் அடிக்கிறார்.

பாக்யாவின் புது ஐடியா
அடுத்ததாக கோபியிடம் அவருடைய அப்பா அந்த வீட்டில் இருந்து மார்க் குறைந்து இருந்தா அதுக்கு காரணம் பாக்கியா தானே காரணம் என்று சொல்லுவ அதே மாதிரி இங்கு இருக்கும்போது இனியா நல்லபடியா பார்த்துக்கொள்ள வேண்டியது உன்னுடைய கடமை தான். அவருடைய இந்த நிலைமைக்கு நீயும் தான் காரணம் என எச்சரிக்கிறார். அடுத்ததாக பாக்கியா தன்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் கூப்பிட்டு வைத்து மீட்டிங் நடத்துகிறார். இனி கடன் கட்ட வேண்டிய காரணத்தினால் வாங்கிய பாத்திரங்களை வைத்து சமைக்கும் இடத்திலேயே சாப்பாட்டை அதிகமாக செய்து விற்பனை செய்வதற்காக புது ஐடியாவை கூற அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.

பாக்கியாவிற்கு வரும் சந்தேகம்
அடுத்ததாக எழில் வீட்டிற்கு வர, வீட்டில் பாட்டியும் செழியனும் எங்கே சென்றிருந்தார் என எழிலிடம் மேலும் மேலும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு அவர்களை சமாளித்து விட்டு பாக்யாவிடம் வர்ஷினி செய்த விஷயங்களை சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். வர்ஷினி அமிர்தாவை பற்றி ஈஸ்வரியிடம் ஏதாவது சொல்லி இருப்பாரோ என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications