பாக்யாவை பற்றி பேசிய இனியா.. சூழ்ச்சி செய்த கோபி..கடைசியில் இப்படி மாறிவிட்டாரே! புது கதை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மீண்டும் பாக்யாவை நினைத்து வருந்தியபடி அவரோடு செல்ல நினைக்கிறார். ஆனால் கோபி அனுப்பி வைக்க மனம் வராமல் புது நாடகத்தை தொடங்கி இருக்கிறார்.

எழில் அமிர்தாவை தேடி போன இடத்தில் அவருக்கு அமிர்தாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியான தகவல்களை கூறியிருக்கின்றனர்.

கோபியின் அப்பாவின் செயல்களால் ராதிகா கோபத்தில் இருந்து வருகிறார்.

எழிலுக்கு கிடைத்த அதிர்ச்சி

எழிலுக்கு கிடைத்த அதிர்ச்சி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், எழில், அமிர்தா வீட்டுக்கு போக அமீர்தாவின் அப்பா அம்மா அழைத்து உட்கார வைத்து பேசுகின்றனர் .எழில் கொஞ்சம் டைம் கேட்க திரும்பத் திரும்ப பழைய கதையே வேண்டாம் என கூறி வருகிறார்கள். எழிலிடம் அவர்கள் சரியாக முகம் கொடுத்து பேசாததால் எழிலுக்கு முகமே மாறுகிறது. அமிர்தா ஒரு சில நாட்களாக என்னிடம் பேசவே இல்லை. பாப்பா சத்தம் கேட்கல அமிர்தா எங்கே எனக் கேட்க அவ ஊருக்கு போயிட்டா, அவங்க அம்மா ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க என சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார். அமிர்தாவின் படிப்புக்காக தான் நாங்கள் இங்கே வந்தோம். இப்போது அவளுடைய படிப்பு முடிந்து விட்டது. அதனால் அவள் ஊருக்கு சென்று விட்டாள். நாங்களும் இரண்டு வாரத்துல ஊருக்கு போயிடலாம்னு இருக்கோம் என சொல்லி இன்னும் அதிர்ச்சி கொடுக்கின்றனர். எழிலிடம் அவர்கள் சரியாக பேசாததால் சரி நான் கிளம்புகிறேன் என சொல்லி சோகத்தோடு எழில் வீட்டை விட்டு கிளம்புகிறார்.

ஆண் குழந்தைதான்

ஆண் குழந்தைதான்

அடுத்ததாக பாக்கியா சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு செய்து கொண்டிருக்கிறார். ஜெனி சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்த செல்வி உனக்கு சப்பாத்தி சாப்பிட்டால் வாந்தி வரவில்லையா? என கேட்க ஒன்றும் அப்படி தோன்றவில்லையே என சொல்ல அப்போ உனக்கு ஆண் குழந்தை தான் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் நான் இனியாவை நினைத்து தான் சிக்கன் குழம்பு வைத்தேன் இனியாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் ஆனால் அவள் அங்கே போய் இருக்கிறாரே என்று பாக்யா பீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி வீட்டுக்கு வருகிறார்.

தப்பை உணரும் இனியா

தப்பை உணரும் இனியா

ராமமூர்த்தி வீட்டுக்கு மீண்டும் வந்ததை பார்த்த ஈஸ்வரி ஓடிவந்து இப்பதான் வீட்டு ஞாபகம் வந்ததா என கேட்க புருஷன் ஞாபகத்தோடு நீ தேடிக் கொண்டே இருந்தாயா என கிண்டல் செய்து கொண்டே நான் சாப்பிட வந்தேன். சாப்பிடுவதற்கு இங்கதானே வருவேன் என்று சொல்லிக்கொண்டு சாப்பிடுகிறார். பின்பு இனியாவுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் அவளுக்கு கொஞ்சம் எடுத்துட்டு போய் கொடுக்குறீங்களா என பாக்கியா கேட்க சப்பாத்தி மற்றும் சிக்கன் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி இனியா விடம் கொடுக்கிறார். அம்மா ரொம்ப பாவம் பாத்திங்களா தாத்தா என பாக்கியாவை நினைத்து பீல் பண்ணுகிறார்.

சரியான முடிவு முக்கியம்

சரியான முடிவு முக்கியம்

ஆமாம் உனக்கு பாக்யாவை பாக்கணும் என்று தோன்றுகிறதா என கேட்க ஆமாம் தாத்தா ஆனால் அங்கு போனா திட்டுவாங்களோன்னு பயமா இருக்கிறது என சொல்ல, யாரும் உன்னை திட்ட மாட்டார்கள். நீ போய் பார்த்துவிட்டு வா என ராமமூர்த்தி கூற, அப்பா என்ன சொல்லுவாருன்னு தெரியல என இனியா பயப்பட, உன்னுடைய முடிவை நீ தான் எடுத்து ஆகணும். அங்கிருந்து எப்படி நீ தைரியமாக வெளியே வந்தியோ அதுபோல நீதான் அங்கேயும் தைரியமாக போக வேண்டும் என இனியா விடம் சொல்கிறார். அதற்கு சரி நான் அப்பா வந்ததும் பேசுகிறேன் என்று முடித்துக் கொள்கிறார்.

கோபியால் அதிர்ச்சியான ராதிகா

கோபியால் அதிர்ச்சியான ராதிகா

அடுத்ததாக இரவில் எல்லோரும் தூங்குவதற்கு தயாராக, இனியாவிடம் ராமமூர்த்தி நீ நேற்று எங்கே தூங்கினாய் என கேட்க நான் ஹாலில்தான் தூங்கினேன் என சொல்ல அப்போ நானும் இங்கேயே தூங்குகிறேன் என்று சோபாவில் அமர்ந்திருக்கிறார் .அதுபோல ராதிகாவும் உங்க அப்பா ஹாலில் படுக்க இருப்பதாக கூறுகிறார். உள்ளே வந்து கட்டிலில் படுக்க சொல்லுங்கள் என்று சொல்வதற்கு இல்லை வேண்டாம் அவர் காலில் ஃப்ரீயாக படுத்துக் கொள்ளட்டும் என்று கோபி சொல்ல சரி அப்போ இனியாவை மயூடன் கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்லுங்கள். நாம் இருவரும் கீழே படுத்துக் கொள்ளலாம் எனக் கூற அது நல்லா இருக்காது அப்பா இருக்காங்க நான் ஹாலில் படுக்கிறேன் நீ ரூமுக்குள் படுத்துக்கொள் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியாகிறார்.

புது நாடகத்தை தொடங்கிய கோபி

புது நாடகத்தை தொடங்கிய கோபி

ஏன் நீங்க மட்டும் ஹாலில் படுக்க வேண்டும் நீங்களும் எங்கள் கூடவே படுக்கலாமே என கேட்டுக் கொண்டிருக்க அது அப்பா இருக்கிறார் நல்லா இருக்காது என்று சொல்ல என்ன காரணம் சொல்லுங்க என்ன சொல்ல நான் பிறகு சொல்கிறேன் என்று கோபி மழுப்புகிறார். பின்பு ஹாலில் வந்து இனியாவை ரூமுக்குள் படுக்க சொல்ல, வேண்டாம் டாடி நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன் என்று இனியா சொல்ல ,சரி ஓகே என இனியாவோடு இருக்கிறார் .அப்போது இனியா டாடி மம்மி ரொம்ப பாவம் நான் அம்மாவை போய் பார்த்துக் கொண்டு வரவா என கேட்க, அப்போ நான் பாவம் இல்லையா? இனியா உனக்கு அந்த வீட்டில் ஏதாவது வேணும்னா சொல்லு அப்பா கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்றேன். ஆனா என்னை விட்டு போயிடாதய எனக்கு முதல்ல நீ நீதான் அப்புறம்தான் மத்த எல்லாமே என சொல்லி என்னை விட்டு போக கூடாது என இனியாவிடம் சத்தியம் வாங்குகிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+