Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய்மறந்து பாக்கியாவை பாராட்டிய கோபி..கோபத்தில் ராதிகா எடுத்தமுடிவு..இரண்டுபக்கமும் இப்படி ஆயிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா முன்பு கோபி பாக்யாவை பாராட்டி இருக்கிறார்.

என் முன்னாடியே பாக்கியாவை பாராட்டுகிறீர்களா என்று ராதிகா எடுத்த முடிவு யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கிறது.

பாக்கிய லட்சுமியின் குடும்பமும் கொடைக்கானலுக்கு வந்ததை அறிந்த ராதிகா இனி இங்க இருக்க வேண்டாம் என்று ஊருக்கு கிளம்பியதற்கு கோபி அவரை சமாதானப்படுத்தி இருக்க வைத்திருக்கிறார்.

திமிரை காட்டிய கோபி

திமிரை காட்டிய கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மகா சங்கமம் நடந்து வருகிறது.இந்த சீரியலில் இன்றைய எபிசொட்டில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினருக்கு கோபிக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்ட உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். மூர்த்தி மற்றும் கண்ணன் இருவரும் கோபியை திட்டி இருந்தாலும் கோபி அவர்களுக்கு எனக்கு டைவர்ஸ் ஆகி பல நாள் ஆகிவிட்டது. இனி உங்க வேலையை போய் பாருங்க என்று திமிராக பேசி அனுப்பி இருக்கிறார்.

குருமூர்த்தியின் அட்வைஸ்

குருமூர்த்தியின் அட்வைஸ்

ராதிகா இனி இங்கே இருக்க வேண்டாம் என்று ஊருக்கு கிளம்பியதற்கு கோபி அவரை சமாதானம் செய்து அவார்டு ஃபங்ஷன் முடிகின்ற வரைக்கும் இங்கே இருக்க சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யலட்சுமி நாம் ஊருக்கு சென்று விடுவோம் என்று சொன்னதற்கு குருமூர்த்தி அப்படி எல்லாம் செல்ல வேண்டாம். வேண்டுமென்றால் அவன் எங்கே வேணாலும் போகட்டும் நாம் இங்கேதான் இருக்கணும் இங்கே எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனால் இங்கே இருப்போம் என்று பாக்யாவையும் குடும்பத்தோடு இருக்க வைத்திருக்கிறார்.

கொண்டாட்டத்திற்கு வந்த கோபி ராதிகா

கொண்டாட்டத்திற்கு வந்த கோபி ராதிகா

இந்த நிலையில் இரவு பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக ஆடி பாடி என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவும், இனியாவும் டூ டுட்டு டூ பாடலுக்கு டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். அப்போது மாடியில் நின்று ராதிகா பார்க்கிறார். நாமும் அங்கே செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கோபி வேண்டாம் இவர்கள் இருக்க இடத்தில் நாம போக வேண்டாம் என்று கூறுகிறார். வாங்க போய் பார்ப்போம் என்று கோபியை ராதிகா கூட்டிக்கொண்டு வருகிறார். இங்கே எழில் அருகில் இரண்டு சேர் இருப்பதால் அதில் ராதிகாவும் கோபியும் வந்து அமர்ந்திருக்கின்றனர்.

கடுப்பான ராதிகா

கடுப்பான ராதிகா

அடுத்ததாக மூர்த்தி டான்ஸ் ஆடுகிறார் அனைவரும் பாட்டு பாடி கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இனியா, எங்க அம்மாவும் அழகாக பாட்டு பாடுவார் என்று கூறுகிறார். அப்போது கோபி மனதிற்குள் கழுதை கத்துன மாதிரி இருக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா ஓர் இனிய பறவை பாடலை மிக அருமையாக பாடுகிறார். இதனால் மெய் மறந்து போன கோபி தன்னை அறியாமல் கைத்தட்டி பாராட்டி விடுகிறார். அருகில் இருந்த ராதிகா இதைப்பார்த்து கோபியை முறைத்தபடி நான் அருகில் இருக்கும்போதே பாக்யாவை ரசித்து பாராட்டுகிறீர்களா என்று கோபத்தோடு எழுந்து செல்கிறார் அவரை சமாதானம் செய்வதற்காக கோபி பின்னாடியே ஓடுகிறார். இதுதான் நாளை நடக்க போகும் எபிசோடு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+