பிக்பாஸ் அல்டிமேட்: புகைவிட்டு புகைச்சலை ஏற்படுத்திய நான்கு போட்டியாளர்கள்..இவர்களும் இப்படியா
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புகைப்பிடிக்கும் அறையில் நான்கு போட்டியாளர்கள் செய்த செயல் அனைவருக்கும் திகைப்பை கொடுத்திருக்கும் நிலையில் அதில் ஒரு பெண் போட்டியாளர் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறப்பு சலுகைகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் எடுக்கப்படும் காட்சிகளை ஒரு மணி நேரமே விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்தனர். ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் போட்டியாளர்கள் செய்வதை ரசிகர்கள் பார்த்து கொள்ளலாம் என்று சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும், தொடர்ந்து பார்க்க முடியாத சூழ்நிலை பல ரசிகர்களுக்கு இருப்பதால் அதற்கும் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு வைக்கப்பட்டுள்ளது.

சிக்கிய காட்சிகள்
இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல செயல்கள் எடிட் செய்யப்பட்டு ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. இதனால் இந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிக்கிய முக்கிய நிகழ்வுகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுவரைக்கும் பார்த்ததில்லையே
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இங்கே புகைபிடிக்கக் கூடாது என்று ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அந்த அறை எதற்காக இருக்கிறது என்று தெரியாமல்தான் இருந்தது. தற்போது அந்த அறைக்குள் நடந்த செயல்களைப் பார்த்ததும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அட...இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறதா?? இதை எல்லாம் நம்மிடம் காட்டாமல் தான் இருந்து கொண்டிருந்தார்களா?? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு சலுகைகள் இங்கே இவர்களுக்கு கொடுக்கப் படுகிறதா என்பது பலருக்கு வியப்பாக இருந்து வருகிறது.
Recommended Video

அதிகரிக்கும் மீம்ஸ்கள்
புகைப்பிடிக்கும் அறைக்குள் நிரூப் மற்றும் அபிநய் புகை பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் சாரிக் மற்றும் ஒரு பெண் போட்டியாளர் தெரிகின்றார். இதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களில் சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ரசிகர்களாலும் அந்த போஸ்ட் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இன்னும் போகப் போக எவ்வளவு விஷயங்கள் தெரிய போகிறதோ என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications