ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா.. அதிர்ச்சி கொடுத்த பாரதி... கடைசியில் இப்படி ஒரு முடிவா!?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டில் இருந்த ஹேமா தன்னுடைய அப்பாவை தேடி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து கொண்ட கண்ணம்மா ஹேமாவை தேடித் திரிகிறார்.
டெஸ்ட் ரிசல்ட் பெறுவதற்காக டெல்லிக்கு சென்ற பாரதி தன்னுடைய போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியாகி இருக்கிறார்.

ஹேமாவை காணவில்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த லட்சுமி ஹேமாவை காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார். எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து ஹேமா இல்லாததால் கண்ணம்மாவுக்கு போன் போட்டு ஹேமா இல்லை என அழுது கொண்ட சொல்கிறார். கண்ணம்மா என்ன ஆச்சு நீ எதுவும் கடைக்கு கூட்டிட்டு போனியா அங்க போய் பார்த்தியா என கேட்க எல்லா இடமும் தேடி விட்டேன் ஹேமா தன்னிடம் உனக்கு அப்பா யாருன்னு தெரியுமா தெரியாதா என தலையில் சத்தியம் செய்து சொல்ல சொன்னதால் தெரியும், நானே தான் அப்பா யார் என்று கண்டுபிடித்தேன் நீயும் அதுபோல கண்டுபிடி என சொன்னேன். அதனால அவள் அப்பாவை தேடி போயிட்டானு நினைக்கிறேன் என்று அழுதபடியே சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைந்து லட்சுமி இப்படியா சொல்வாய் என திட்டி விட்டு கடைசியில் சரி போனவை நான் வருகிறேன் என்று போனை கட் செய்கிறார்.

பாரதி வீட்டுக்கு போகவில்லை
அதே நேரத்தில் லட்சுமி போன் செய்வதற்கு முன்பு பாரதி இன்று மதியத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு வர மாட்டார் அதுபோல மூன்று நாட்களுக்கு தான் பார்ப்பவர்களை பார்க்க முடியாது எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் செய்ய சொல்லி விட்டார் என்று கண்ணம்மாவிடம் ரிசப்ஷன் பெண் வந்து சொல்ல கண்ணம்மா என்ன காரணம் என தெரியாமல் குழப்பத்தோடு இருக்கும்போது தான் லட்சுமி போன் பண்ணுகிறார். இதனால் கண்ணம்மாவுக்கு மேலும் குழப்பத்தோடு பாரதியின் வீட்டிற்கு போன் செய்து எங்க போனான்னு தெரியல அங்கே வந்தாளா என சௌந்தர்யாவிடம் விசாரிக்க சௌந்தர்யா ஹேமா இங்க வரவில்லையே என சொல்ல லட்சுமி மற்றும் ஹேமாவுக்கு நடந்த பேச்சுவார்த்தை பற்றி கூறுகிறார்.

ரவுடிகள் தேடுதல்
அதே நேரத்தில் குமார் ஹேமாவின் போட்டோவை ஒவ்வொருவருக்காக அனுப்பி ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் நாங்கள் பார்த்து சொல்கிறோம் என்று சொல்ல கண்ணம்மா அழுது கொண்டே அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் .அதே நேரத்தில் ஹேமாவை தேடி ரௌடிகள் அலைந்து கொண்டிருக்கின்றனர் .வெண்பா போன் செய்து ரவுடிகளிடம் என்ன ஆச்சி அவளை தூக்கிட்டீங்களா என கேட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியாவது உடனே தூக்க வேண்டும் என ரவுடிகள் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் பாரதி செய்த தவறான செயல்
ஒரு பக்கமாக ஹேமா ஆசிரமத்தை தேடி விசாரித்துக் கொண்டிருக்க டெல்லிக்கு வரும் பாரதி ரிசல்ட்டில் எந்த குளருபடியும் நடந்துவிடக்கூடாது என்று தான் நேரடியாக நான் டெல்லி வந்துள்ளேன். கண்ணம்மா தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு ஏன் உன் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. அப்படி மட்டும் நடந்தா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயாராக இருக்கிறேன் ஆனால் அப்படி ரிசல்ட் வரலனா இப்படி ஒரு முட்டாள்தனமான வாழ்க்கையை வாழக்கூடாது என என்னுடைய வாழ்க்கையை நானே முடிச்சுக்குவேன் என போனை சுவிட்ச் ஆப் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications