என் கணவர் இருந்திருந்தால் இந்தப் பெயர் வராது, யார் கூடவாவது பேசினால்...?? பீல் பண்ண வைத்த பாவனி
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் பாவனியை பற்றி பலர் தவறாக பேசியதை நினைத்து அவர் ஃபீல் பண்ணியை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Recommended Video
என்னதான் பாவனி வெளியே சிரித்துக்கொண்டு இருந்தாலும் மனதிற்குள் எவ்வளவு வேதனைகள் இருக்கிறது என்று ரசிகர்களும் ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
தன்னுடைய கணவர் தன் கூட இல்லாததால் தான் அனைவரும் தன்னைப் பற்றி தவறாக நினைத்து பேசுகிறார்கள் என்று அவர் மனம் உருகி உள்ளார்.

ஃபீல் பண்ண வைத்த வார்த்தை
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் ஒரு செயல்தான் ராஜு செய்த செயல் என்று பலர் கூறி வருகின்றனர். இதற்கு முன்பு எந்த சீசனிலும் இந்த அளவிற்கு ரசிகர்கள் ஃபீல் பண்ண வைத்தது இல்லை. ஆனால் தற்போது ராஜு பேசிய விஷயம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. சின்னத்திரையின் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பாவனி அந்த வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வருகிறார்.

மனதை திறந்த பாவனி
ஆரம்பத்திலிருந்து அபிஷேக் உடன் இவர் நெருக்கமாக இருந்த நேரத்தில் ஒருநாள் விளையாட்டாக ராஜூ, அபிஷேகிக்கும், பாவனிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டபோது அபிஷேக் என்னுடைய அக்கா பாவனி என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகு அந்த பேச்சை அப்படியே முடிவடைந்த நிலையில் தற்போது அபிநய் மற்றும் பாவனி இடையில் ஏதோ இருக்கிறது என்கிற மாதிரிதான் போட்டியாளர்கள் பேசி வருகிறார்களாம். இதை பார்த்து மனதிற்குள்ளே வருத்தம் அடைந்து கொண்டிருக்கும் பாவனி நேற்றைய அன்சீன் எபிசோடில் கேமரா முன்னாடி தன்னுடைய மனதில் இருப்பதை கொட்டியிருக்கிறார்.

தெரியாத மறுபக்கம்
பாவனியின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பல ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுடைய சோகக் கதையைச் சொல்லும் டாஸ்க்கில் அவருடைய கடந்த கால வாழ்க்கையை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து இருந்தார். என்னதான் சீரியலில் கதாநாயகியாகப் ஜாலியாக நடித்துக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை பலருக்கும் தெரிந்து கொள்ளாமல் தான் இருந்தது. ஆனால் இவர் கதை சொன்னதும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் அதற்குப் பிறகு அதையே வைத்து தான் தற்போது கதை கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

மனதை பாதிக்கும் வார்த்தை
பாவனியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனியாக இருப்பதால் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு சிலர் அவரைப் பற்றி இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஃபீல் பண்ணியப்படி நள்ளிரவில் இவர் கேமரா முன்பு பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய கணவர் மீது தான் எனக்கே கோபம் வருகிறது. அவர் இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. கணவர் இல்லாத ஒருவர் யார் கூடவாவது பேசினால் லவ் பண்ணுவாங்களா??என் அம்மா அப்பாவை விட எனது மாமியாரை நினைத்து தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என்னால் அவங்க இன்னும் எவ்வளவு கஷ்டங்களை தாங்க வேண்டுமோ என்று தெரியவில்லை!!?? இங்கே பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது. ஆனால் ராஜூ நேற்று மன்னிப்பு கேட்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது தான். ஆனால் கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துவிடும். என்றவர் தழுதழுத்த குரலில் பேசியதைப் பார்த்து ரசிகர்கள் பலர் பீல் பண்ணி ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications