Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் முட்டிக்கொண்ட பாவனி, ராஜு...ரெஸ்பான்ஸ் தான் பிரச்சனையா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு ரெஸ்பான்ஸ் தரவில்லை என்று பாவனி போர்க்கொடி தூக்கி கொண்டிருக்கிறார்.

எதற்காக தரவேண்டும் என்று அடாவடியாக ராஜு கேள்வி கேட்டு அனைவரையும் அதிர வைத்திருக்கிறார்.

இவங்க பிரச்சனை முடியாதா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் நாட்கள் செல்ல செல்ல பிரச்சனைகள் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கொள்வது புதியது அல்ல. அந்த மாதிரி தான் தற்போதைய சீசனில் கூட பாவனி மற்றும் ராஜு இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் பாவனியின் கேரக்டரை பார்த்து பாவம் என்று நினைத்துக் கொண்டிருந்த ராஜு தன்னை குறை கூறி விட்டார் என்று காரணத்தால் அவரை ஒதுக்கி தள்ள ஆரம்பித்து விட்டாரா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு ஏற்பட்ட தருணம்

கருத்து வேறுபாடு ஏற்பட்ட தருணம்

கிச்சன் டாஸ்க்கில் பாவனி, சுருதி, ராஜு அனைவரும் ஒரே அணியாக இருந்தாலும் பாவனி, சுருதி சீக்கிரமாக எழுந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு இருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் எடுத்துக்கொண்டு சர்வீஸ் செய்வது தான் அனைவரும் புகழ்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் நாங்கள் சீக்கிரமா எழுந்து வேலை செய்கிறோம். ஆனால் எல்லா நல்ல பெயரும் உங்களுக்கு மட்டுமா என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அப்போது ஏற்பட்ட கருத்துவேறுபாடு இப்ப வரைக்கும் ராஜுவுக்கும் பாவனிகும் சரியாகவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரே அணியில் சேர்ந்தாச்சு

ஒரே அணியில் சேர்ந்தாச்சு

அதற்குப் பிறகு தாமரையிடம் காயின் விஷயத்தில் பாவனி நடந்து கொண்டது எனக்கு பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராகவே கூறிக்கொண்டிருந்தார். அதன்பிறகு ஒவ்வொரு இடத்திலும் அவரை மட்டம் தட்டுவதில் கவனமாக இருக்ந்தார். சிரித்தபடியே அனைவருக்கும் சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் பாவனியை மட்டும் மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் தற்போது ஒரே அணியாக சேர்ந்து இருக்கின்றனர். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் முடிவடையாத நிலையில் இப்போது புது பிரச்சனை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

Recommended Video

    Pavani கிட்ட Thamarai ஒரு மணி நேரம் என்ன பேசினார் | Bigg Boss 5 Tamil Day 58 Minis View
    ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை

    ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை

    ப்ரமோவில் நாம என்ன செய்யப் போகிறோம் என்று ஒன்றுமே தெரியவில்லையே என்று அமீர் டாஸ்க் விஷயத்தில் என்ன பண்ண வேண்டும் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், எனக்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸும் தரவில்லை என்று குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார். அப்போது ராஜு எதற்காக தரவேண்டுமென்று அடாவடியாக கேட்டிருக்கிறார். ஒரே அணியாக இருந்தாலும் போட்டியில் என்ன என்ன நடக்கிறது என்பது தெரியாமல் எப்படி விளையாட முடியும் என்று நான் இந்த அணியில் இருக்கவில்லை என பாவனி கூறியிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இன்று சண்டை வேற லெவல் இருக்கப்போகிறது என்று கூறிவருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+