தொடரும் கேள்விகள், சந்தேகங்கள், வதந்திகள்...பாவனியின் ஒரே பதில்.. இதை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கு அளவுக்கு அதிகமாக வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு பாவனி பதில் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பாவனி கொடுத்த பதிலை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சின்னத்தம்பி சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னதிரை ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாகவும், கதாநாயகியாகவும் வலம் வந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களை கவர்ந்து விட்டார். எந்த அளவிற்கு இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தார்களோ அதே அளவிற்கு நெகட்டிவ் கருத்துக்களும் வந்த வண்ணமாகவே இருந்தது. பொதுவாக வாழ்க்கையில் அடிப்பட்டு, சில இடங்களில் மேலே வந்து விட துடித்துக்கொண்டிருக்கும் நபர்களில் ஒருவராக பாவனி ரெட்டியும் இருந்துவருகிறார்.

3வது இடத்தில் வெற்றி
இதுவரைக்கும் சீரியல்களில் கதாநாயகியாகவே பார்த்து வந்த பாவனி ரெட்டி சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்துவருகிறார். போட்டோஷூட் மூலமாக பல இளைஞர்களை தூங்கவிடாமல் பாடாய் படுத்தி எடுத்து வருபவர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அதிகமான ஆதரவு இருந்து வருகிறது. அதனால் தான் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருந்து மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றார்.இவருடைய மற்றொரு முகத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அனைவருக்கும் தெரிய வைத்தது.

கலங்க வைத்த கடந்தகால கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இவருக்கு திருமணம் முடிந்து அவருடைய காதல் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவாக இருந்தாலும், அந்த கவலையில் இருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்றுதான் இவர் போட்டோசூட்டிலும் நடிப்பிலும் பிசியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய கடந்த கால கதையை சொல்லி அனைவருடைய மனதிலும் சோக கீதத்தை பாட விட்டு ஆரம்பத்தில் பரிதாப இடத்தை பிடித்து விட்டார்.

பாவனியின் பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரிடம் ஆரம்பத்தில் அபிநய் நட்பை தாண்டி பேசி வருவதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இவர் கூறி அங்கே பெரிய பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் அவரிடம் நேரடியாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இவரிடம் அதிகமாக பாசமாக இருந்துவந்தார். இதைப்பற்றி சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக அதிகமான கருத்துக்கள் பரவி வந்தது. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் அதேபோலவே வந்து கொண்டிருக்கிறதாம். அதனால் என்னை சுற்றி பல கேள்விகள், சந்தேகங்கள், வதந்திகள், ஊகங்கள் எல்லாம் எழுந்து கொண்டு இருக்கிறது. அதற்கு என்னுடைய பதில் நான் கூச்சலிடுகிறேன் என்று இவர் புடவையில் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பதிவிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications