பாவனி விஷயத்தில் மனைவியின் செயல்பாடு இதுதான்...விளக்கமளித்த அபிநய்...கொடுத்து வச்சவர் தான்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தன் வீட்டில் நடப்பதை அபிநய் வருத்தத்தோடு கூறியுள்ளார்.
Recommended Video
முதல் முறையாக ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் அபிநய் பதிலளித்துள்ளது வைரலாக பரவி வருகிறது.
பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கேள்விக்கு அபிநய் முதல்முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

திரை குடும்பத்தை சேர்ந்தவர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே ஒருசில போட்டியாளர்களின் வாழ்க்கையை எங்கேயோ போய்விடும் என்று நம்பி தான் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அது வரைக்கும் இருந்த பேரும் புகழையும் கூட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இழந்து போயிருக்கிறார்கள். அது முதல் சீசனில் இருந்து ஜூலியில் தொடங்கி இப்ப வரைக்கும் பலருடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அபிநய் திரைப்பட பின்னணி குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகாமல் தான் இருந்து வந்தார்.

மக்களின் ஆதரவு
அபிநய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் ஜெமினி கணேசனின் பேரன் என்று பலருக்கும் தெரியவந்தது. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை, அது மட்டுமல்லாமல் தன்னுடைய திறமையையும் உலகுக்கு காட்ட வேண்டும் என்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு இருந்து கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு வாரமும் இவர் எலிமினேஷனில் வந்து கொண்டிருந்தாலும் மக்களால் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருந்தார்.

பவானியின் குற்றசாட்டு
இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருக்கும் பாவனியிடம் நட்பைத் தாண்டி பழகுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தார். பாவனியின் குற்றசாட்டை ஆரம்பத்திலிருந்தே மறுத்து வந்தார் அபினய். ஆனால் சக போட்டியாளர்களும் இவரின் நடவடிக்கை வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்று அவரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தன்னுடைய மனநிலை எப்போதும் மாறாது என்று இவர் கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது.

கருத்து பலமா இருக்கே. ..
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவருடைய மனைவி பாவனி விஷயத்தைப் பற்றி இவரிடம் எப்படி நடந்து கொள்வார் என்று பலர் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தனர். அதே கேள்விகளை தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிபி முதல் பல போட்டியாளர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் அபிநய் விளக்கம் அளித்துள்ளார். அதில் சில சமயங்களில் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம்.எல்லா மனைவிமார்களை போலத்தான் அவரும் ரியாக்ட் செய்தார். ஆனால் நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பது தான் முக்கியம். இறுதியில் குடும்பம் தான் அனைத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் அப்போ அபினநய் வீட்டில் அடி பலமாக விழுந்திருக்கிறது போல என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications