பாவனி பேசிய ஒற்றை வார்த்தை... முதிர்ச்சியான பேச்சை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்
சென்னை: பாவனி செய்வது தவறு என்று பல ரசிகர்கள் குறை கூறிக் கொண்டிருக்கும் போது நேற்று அவர் செய்த செய்கையை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.
இந்த வயதில் இவ்வளவு முதிர்ச்சியா என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
எவ்வளவு கஷ்டங்களை பார்த்து இருந்தால் இப்படி ஒரு வார்த்தையை பேச முடியும் என்று நெட்டிசன்கள் கூட தற்போது கூறி வருகின்றனர்.

கதை சொல்லும் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் பாவனியைப் பற்றி அவ்வளவாக ரசிகர்களுக்கு தெரியவில்லை. அவர் சின்னத்திரையில் ஒரு கதாநாயகியாக அறிமுகமாகி பலருக்கும் பார்த்து இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் பட்ட துயரங்களும், சோகங்களும் பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த கதை சொல்லும் டாஸ்க் தன்னுடைய கடந்த கால மற்றும் மனதை பாதித்த கதையை சொல்லி அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

அதனால் தான் இவ்வளவு கடுப்பா
உலகில் மனிதர்கள் வாழ்வதே அன்பு என்ற ஒற்றை வார்த்தையில் தான். அந்த அன்பால் தனக்கு ஏற்பட்ட காதலால் அவர் பட்ட கஷ்டம் போன்றவற்றை மனதுருகி சொல்லி அனைவரின் மனதில் இடத்தை பிடித்து இருந்தாலும் பலர் அவருடைய செயல்பாடுகளைப் பற்றி குறை கூறி வருகின்றனர். பாவனியை பற்றி ஒரு சிலர் குறை கூறிக் கொண்டிருந்தாலும் அவருடைய செயல்பாடுகளையும் நிலைமையும் பார்க்கும்போது அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாவதாக ஆர்மி அமைத்தது பாவனிக்கு தான். அதனாலேயே ஒரு சிலருக்கு அவர் மீது இவ்வளவு கடுப்பா என்று தெரியவில்லை என அவருடைய தீவிரமான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மனதை பாதித்த காதல்
பாவனியின் காதல் கணவர் திடீர் இழப்பு காரணமாக அவர் வாழ்க்கையில் பட்ட துயரங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதற்கு பிறகு உனக்கு ஆறுதலாக இருக்கிறேன் என்று கூறி ஒருவர் அவருடைய வாழ்க்கையில் வந்து இருந்தாலும், அவரும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை கூறி அவரை மனதளவில் அதிகமாக காயப்படுத்தியது, காதல் மீதே தனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய காதல் கணவர் இருந்திருந்தால் இந்த மாதிரி ஒரு நிலைமை தனக்கு வராது என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார். அதனால் அடிக்கடி இந்த ஒரு வார்த்தைகளை கூறி வருகிறார்.

ரசிகர்களின் அறிவுரை
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் அபிநய் தன்னிடம் நட்பைத் தாண்டி பழகுவதாக இவருக்கு தோன்றவே இவர் அனைவரும் முன்னாடியும் தனக்கு அபினை கடிதம் கொடுத்தது தொடர்பாக பேசியுள்ளார். அதற்குப்பிறகு எவ்வளவோ முறை அவரிடம் பொறுமையாக கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை முடிவதற்கு முன்பாக அமீர் அறிமுகமானதும் வந்த முதல் நாளில் இருந்தே பாவனியின் மீது பாசத்தோடு நடந்து கொண்டிருந்ததை பார்க்கும் போது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல பாவனியிடம் காதல் செய்வதை உறுதி படுத்திக் கொண்டிருக்கிறார். இதை தைரியமாக கோபத்தோடு பேசவேண்டும் என்று ரசிகர்கள் பலர் பாவனிக்கு அறிவுரைகளை அனுப்பி கொண்டிருக்கின்றனர்.

சகோதரியின் அறிவுரை
நேற்றைய எபிசோட்டில் பாவனியின் சகோதரி கூட பாவனியிடம் இதை தான் கூறி இருக்கிறார். இந்த வீட்டிற்குள் அனைவரும் உன்னிடம் நன்றாக தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒருவர் தான் உன்னுடைய பெயர் கெட்டுப் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. அவரிடம் கவனமாக இரு, என்று அவருக்கு கண்ணியத்தோடு அறிவுரை கூறியிருக்கிறார். அப்போது எனக்கும் தெரியும்!!?? ஆனால் நான் எவ்வளவோ முறை அவனுக்கு புரிய வைத்து விட்டேன். என்னிடம் காதலிக்கிறேன் என்று சொன்னால் நான் கோபப்பட்டு பேசி அவர்களுடைய வாழ்க்கையும் வீணடிக்க விரும்பவில்லை. கடினமாக சொல்வதால் என்னுடைய பெயரும் கெட்டுப் போய்விடும் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையும் வீணாகி விடக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
Recommended Video

இவ்வளவு முதிர்ச்சியா
இந்த வயசுல நிறைய விஷயங்கள் பார்த்திருக்கிறேன். நிறைய லவ் ஸ்டோரிகளையும் பார்த்து இருக்கிறேன். அதனால் இப்ப யாராவது என்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் நான் சிரிப்பேன். ஐயோ எனக்கு ஆர்வம் இல்லை.. மன்னிக்கவும் இப்படி சொல்ல என்னால் முடியும். அதை செய்யத் துணியாதே என்று அவர்களிடம் முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ளக்கூடாது. அது போன்ற பலரை நான் பார்த்து இருக்கிறோன். நாம் வாழும் தலைமுறையில் இது நடக்கும் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த வயது முதிர்ந்த பேச்சை பார்த்து ரசிகர்கள் என்னதான் ரசிகர்கள் எனக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதை தெளிவாக முகத்துக்கு நேராக சொல்ல வேண்டும், கோபத்தோடு சொல்ல வேண்டும் என்று கூறி கொண்டு இருந்தாலும், அமீரிடம் இவர் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கூறி வருவதை பார்க்கும் போது அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications