பாவனியை பீல் பண்ண வைத்த போட்டியாளர்கள்.. வந்த வேலைய தொடங்கிட்டாங்க
சென்னை: ஒருவாரம் முடிவடைவதற்கு பிறகு தங்களுடைய குணங்களை காட்டத் தொடங்கிவிட்டார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
முகத்திரை கிழிந்து விட்டதா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
போன வாரம் முழுக்க பேசிய பேச்சு என்ன ஆச்சு என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்தி போட்டு வருகின்றனர்.

ஆட்டம் சூடு பிடிச்சிருச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரம் முடிவடைந்த நிலையில் இவ்வளவு நாளாக கலகலப்பாகவும் ஜாலியாகவும் போய்க்கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி இன்றுதான் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ப்ரோமோ ஒவ்வொன்றும் வைரலாக பத்தி எரிந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஜாலியாக கலகலப்பாக கலாய்த்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் இப்போது நாமினேஷன் என்று வந்ததும் ஒருவரை மாற்றி ஒருவர் போட்டுக் கொடுக்க தொடங்கி விட்டனர்.

வந்த வேலைய தொடங்கிட்டாங்க
எப்படியோ நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்துதான் தங்கள் வந்த வேலையை சிறப்பாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இனிதான் என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்றும் நிகழ்ச்சிக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இது வரை ஒளிபரப்பாகி வந்த சீசன்களில் எல்லாவற்றையும் விடவும் இந்த சீசனில் தான் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர்.

முதல் எலிமினேஷன்
அதில் நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கும் நேரத்தில், அவர் என்ன காரணத்திற்காக சென்றார் என்றுதான் தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் எலிமினேஷனின் ஏழு போட்டியாளர்களின் பெயர்கள் இருப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை தக்க வைப்பதில் அனைவரும் முனைப்பாக இருக்கின்றனர்.

ஃபீலான பாவனி
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் கடைசி வரைக்கும் போட்டியாளர்கள் கண்டிப்பாக இப்படி ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்று கூறி வந்த நிலையில், இன்றைய ப்ரோமோவில் பாவனி ரெட்டி தான் போனால் ஒரு சிலர் தான் பேசும் விஷயத்தை காது கொடுக்காமல் அவர்களாகவே வேறு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், என்னை ஒதுக்குகிறார்கள் என்றும் பீல் பண்ணி கொண்டிருக்கிறார்.

சூடான வாக்குவாதம்
பாவனிக்கு ஆதரவு சொல்லிக்கொண்டிருக்கிறார் இசைவாணி. ஆனால் அப்படி எல்லாம் இல்லை எல்லோரும் உங்களை தான் கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் நீங்கள் தான் வராமல் இருக்கிறீர்கள் என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஐக்கி. இவர்கள் மூவரும் தான் இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் இடம் பிடித்திருக்கின்றனர். இதைப் பார்த்ததும் சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதைப் பார்ப்பதற்காக ஆர்வமாகவும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications