சஞ்சீவின் அக்கா இவர் தான்... எதிர்பார்க்காத இறப்பு.. அக்கா மகளுக்கு தந்தையாக மாறிய சஞ்சீவ்
சென்னை: சஞ்சீவ் தனது அக்காவைப் பற்றி உருக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதைக் கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
சஞ்சீவ் அக்காவும் ஒரு நடிகை தான் என்பதை ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
சஞ்சீவின் அக்காவின் இறப்புக்கான காரணம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை பீல் பண்ண வைத்துள்ளது.

வைல்ட் கார்ட் என்ட்ரி
பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் சஞ்சீவ் பற்றிய செய்திகள் தற்போது ரசிகர்களை ரொம்பவே ஃபீல் பண்ண வைத்துள்ளது. பலருடைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் சோகங்களும் துயரங்களும் வெளியில் தெரிவதில்லை என்பதற்கு அடையாளமாகத் தான் சஞ்சீவ் இருந்து வந்திருக்கிறார். இவர் நடிப்பின் மூலமாக பலரையும் சிரிக்க வைத்தும் இருந்தாலும் அவருடைய இன்னொரு பக்கம் சோகமானதாக இருந்துள்ளது.

பலருக்கும் பரிச்சயமான நடிகை சித்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் தன்னுடைய அக்காவை நினைத்து உருக்கமாக பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் யார் அவருடைய அக்கா என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடி வருகின்றனர். அதில் சஞ்சீவ் அக்காவும் ஒரு நடிகைதான் என்று பலருக்கும் தெரியாமல் தான் இருந்துள்ளது அவருடைய அக்கா பிரபல நடிகை சிந்து தான். அவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான சியாமளாவின் மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சித்து. தமிழில் முதல்முறையாக சித்து இணைந்த கைகள் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டல்
முதல் திரைப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி, கிரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அவர் இறந்த பிறகு தான் திரைக்கு வந்துள்ளது இதுவரைக்கும் அவர் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமலலாமல் சின்னத்திரையிலும் அதிகமாக நடித்துள்ளார். அதிகமாக சீரியல்களில் அவர் வில்லி கேரக்டரில் நடித்து உள்ளார். ஆனால் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு ஹீரோயினி தான்.

புரட்டிப் போட்ட சுனாமி தருணம்
1995ஆம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின் இவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அதற்காக மருத்துவத்தை எடுத்துக் கொண்டு தொடர்ந்து சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருந்துள்ளார். ஆனால் கடைசியாக 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தையே புரட்டிப் போட்ட சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தனர். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக அவர் நிதி திரட்டி உள்ளார்.

தந்தையாக மாறிய சஞ்சீவ்
தொடர்ச்சியாக அவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு தன்னுடைய உடல் நலத்தை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டாராம். தொடர்ந்து ரெஸ்ட் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருந்ததாலும், அதிகமாக நடந்து கொண்டே இருந்ததாலும், இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருந்ததாம். அதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து உள்ளார்கள். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளார். அப்போது சித்துவின் குழந்தையான ஸ்ரேயாவுக்கு வயது 9 தானம். அக்காவின் மறைவு பெருத்த துயரத்தை கொடுத்திருந்தாலும் மருமகளை மகளாக வளர்க்க வேண்டிய பொறுப்பு சஞ்சீவ்க்கு ஏற்பட்டுள்ளது. அக்காவின் மீது உள்ள பாசத்தால் தாய்மாமன், தந்தையாக மாறி உள்ளார்.

கலங்கிப் போன சஞ்சீவ்
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அஸ்வின் தன்னுடைய திரைப்படத்தின் டீசரை வெளியிடும் போது மேடையில் தோன்றியதை பார்த்ததும் பெருமையோடு பேசிய சஞ்சீவ் தன்னுடைய அக்காவின் மறைவிற்குப் பிறகு அக்காவின் மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. கண் கலங்கிய படியே தற்போது சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் தாய்மாமன் என்றாலே எப்போதும் தந்தைக்கு சமம் தான் அதுவும் உருக்கமாக சஞ்சீவ் பேசியதைப் பார்த்து பலர் பீல் பண்ணி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications