Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னப்பொண்ணு, தாமரையை ஏமாற்றிய நிரூப்- பிரியங்கா கோஷ்டி...கடுப்பான ராஜு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வெகுளியானவர்களை இப்படி ஏமாற்றலாமா என ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்.

கடைசி வரைக்கும் உனக்குத்தான் சப்போர்ட் பண்றோம் என்று சொல்லி கடைசியில் ஆப்படித்த பிரியங்கா கோஸ்டி.

ஆரம்பத்திலிருந்தே இது பிடிக்கவில்லை என கடுப்பான ராஜுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

 அப்போ எல்லாம் நடிப்பா??

அப்போ எல்லாம் நடிப்பா??

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்கள் ஜெகஜெகவென குவித்திருக்கின்றனர். எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அளவுக்கு அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அதில் அதிகமானோர் புதுமுகங்களாக இருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் ஆக இருக்கின்றனர். இவரெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரா?? என்று நினைத்தவர்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டனர். நாங்கள் எல்லாம் அப்படி என்று ஒன்றுக்குள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தவர்கள் தற்போது சுயநலத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். இது அவர்களுடைய உண்மையான கேரக்டரா அல்லது நடிப்பா என்றே புரிய முடியாத வகையில் தான் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

    4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil
    எது உண்மைன்னு தெரியலையே

    எது உண்மைன்னு தெரியலையே

    பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இதில் கலந்துகொள்ள பல போட்டியாளர்கள் யோசித்து வருவர். காரணம் இதில் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரில் இருந்த பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி தங்களுடைய பெயரையும் புகழையும் கெடுத்து விட்டனர். காரணம் அவர்கள் செய்யும் செயல் ஒன்றாக இருந்தாலும் நிகழ்ச்சிக்காக வெளியே காட்டுவது வேறு மாதிரியாக அமைந்து விடுகிறது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பும் ரசிகர்கள் அதுவரைக்கும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீது வைத்திருந்த நல்ல அபிப்ராயங்களை தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசில போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து பெரிய அளவில் பேமஸ் ஆகி விடுகின்றனர்.

    பிரியங்கா மீது வருத்தம்

    பிரியங்கா மீது வருத்தம்

    பலருக்கும் பரிச்சயமான தொகுப்பாளராக இருந்துகொண்டிருக்கும் பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகி அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய கலகலப்பு குறையாமல் இவர் ஜாலியாகவே இந்த நிகழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில நாட்களாக இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இவர் தற்போது அபிஷேக் உடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் விளையாடுவது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லையாம். இவர்கள் இருவரும் தங்களுக்கு சுயநலமாக தான் விளையாண்டு வருகின்றனர் என்று ரசிகர்கள் பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

    அன்றே கணித்தார் ராஜு

    அன்றே கணித்தார் ராஜு

    தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்துகொண்டிருக்கும் டாஸ்க்கில் பிரியங்கா அணியினர் தாமரைச்செல்வி மற்றும் சின்னப்பொண்ணுவின் பெயரை சொல்லி சக போட்டியாளர்கள் இடம் இருந்த பாதுகாப்பு காயினை பெற்று கடைசியில் அவர்கள் இருவருக்குமே ஆப்பு வைத்து விட்டனர். ஆரம்பத்திலிருந்தே பிரியங்கா இந்த விளையாட்டில் தாமரைச்செல்வியை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் இதனை கவனித்துக் கொண்டிருந்த ராஜு இவர் பேசுவதை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தாமரை செல்வியிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டார். இது எல்லாம் அவர்கள் சுயநலத்துக்காக தான் செய்கிறார்கள் என்று. கடைசியில் ராஜுவின் கருத்துப் படியே நடந்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    ரசிகர்களின் கருத்து

    ரசிகர்களின் கருத்து

    சின்னப் பொண்ணுவை எப்படியும் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி விடவேண்டும் என்று அபிஷேக் ஒருபக்கம் பேசிக்கொண்டிருந்தார். மறுபக்கம் தாமரை செல்வியை காப்பாற்ற வேண்டும் சென்று அவருக்கு சாதகமாக பேசி விடுகிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன பொண்ணுவை செக் பண்ணவேண்டும் என்று தனி அறையில் பிரியங்கா செக் பண்ணுனது ரசிகர்களின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கடைசி வரைக்கும் உனக்காகத்தான் விளையாடுகிறோம் என்று சின்னப்பொண்ணுவையும் தாமரையையும் பிரியங்கா கோஷ்டி ஏமாற்றிவிட்டது என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+