"மூஞ்சியும் மொகரையும் பாரு” அமுதவாணனை திட்டிய ஜிபி முத்து..கடைசியில் கொடுத்த விளக்கம் தான் அல்டிமேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து அமுதவாணனை கண்டமேனிக்கு திட்டி இருக்கிறார்.

ஜி பி முத்து வழக்கமாக பல வீடியோக்களில் இந்த மாதிரி திட்டி இருந்தாலும் தற்போது முகத்துக்கு நேராக அமுதவாணனை இவர் இப்படி ஒரு வார்த்தை பேசுவது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி எல்லாம் என்கிட்ட பேசினா அறுத்து கிழிச்சி புடுவேன் என்று படு லோக்கலாக ஜி பி முத்து அமுதவாணனை திட்டி இருக்கிறார்.

பிக் பாஸ் எடுத்த புது முயற்சி

பிக் பாஸ் எடுத்த புது முயற்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்தது. அதனால் ஒவ்வொரு சீசனின் தொடங்கும் போது இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை பார்த்து பார்த்து செலக்ட் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு சீசன்களில் அதிகமான புது முகங்கள் கலந்து கொண்டதால் அது ரசிகர்கள் மத்தியில் அந்த அளவு எடுபடவில்லை என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனாலே இந்த முறை பல வித்தியாசங்களையும் புதுமைகளையும் புகுத்த வேண்டும் என்று ஆரம்பம் முதலே பிக் பாஸ் அணியினர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

பிக் பாஸில் அறிமுகம்

பிக் பாஸில் அறிமுகம்

டிக் டாக் மூலம் பிரபலமாகி தற்போது யூட்யூப் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து இருக்கும் ஜி பி முத்துவை இந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக அதுவும் முதல் போட்டியாளராக இந்த முறை அறிமுகம் செய்திருக்கின்றனர். அவருடைய அல்டிமேட் காமெடி பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் அமுதவாணனும் அடிக்கடி ஜி பி முத்துவோடு சேர்ந்து அரட்டை எடுத்து அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.

அமுதவாணனின் கேள்வி

அமுதவாணனின் கேள்வி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அதிகமானோர் ஜி பி முத்துவைதான் கலாய்த்து வருகின்றனர். ஜி பி முத்து தன்னுடைய வெள்ளந்தியான சிரிப்பு மற்றும் என்ன சொல்றீங்க ? என்ற குழந்தைத்தனமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அமுதவாணன் பலமுறை ஜிபி முத்துவை கலாய்த்து கொண்டிருப்பது போல இன்றைய எபிசோடில், உங்களை எல்லோரும் அண்ணன் என்று சொல்றாங்களே உங்களுக்கு வருத்தமா இல்லையா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

சரளமாக வந்த வார்த்தை

சரளமாக வந்த வார்த்தை

அதற்கு ஜிபி முத்து இதுல என்ன தப்பு, பத்து வயசு ஆகவே இருக்கட்டுமே, என்ன அண்ணன்னு சொல்லட்டும், சித்தப்பா ன்னு சொல்லட்டும், மாமான்னு சொல்லட்டும். எதுக்கு நான் வருத்தப்படணும். என்னை விட சின்ன பங்களா இருந்தாலும் சரி, அண்ணன் என்று சொல்வதில் ஒரு தப்பு ஒன்னும் இல்லையே ஆனால் நேற்றைக்கு நான் உங்களை கவனிச்சேன் .உங்களை அண்ணன் என்று சொன்னதும் என்னது நான் அண்ணனா? என்று அவ்வளவு ஷாக் ஆகுறீங்க .அப்படி சொல்லக்கூடாதோ என்று அமுதவாணனிடம் பதில் கேள்வி கேட்டிருக்கிறார். அதோடு ஆளையும் சைஸ்ஸயும் பாருங்க, இனி உங்களை தாத்தா என்று கூப்பிடனும். மூஞ்சி மொகரையும் என்று தனக்கே உரிய டயலாக்கை ஜி பி முத்து அமுதவாணனை பார்த்து பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+