பிக்பாஸில் தொடங்கியது டிக்கெட் பைனல்... அப்போ வாயாலயே வடை சுடுவாங்களே!!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர் டிக்கெட் பைனல் தொடங்கிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலிடத்திற்கு செல்லும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

இரண்டாவது கட்டத்தில் ஐந்தாவது சீசன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5வது சீசனில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் 8 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் ராஜூவை டைட்டில் வின்னர் என்று கூறிக் கொண்டிருந்தாலும் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏற்கனவே எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறுவது போல மாற்றம் இருக்குமா??என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

யார் அந்த அதிர்ஷ்டசாலி
கடந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன் இருந்தது போல இந்த வாரத்திலும் இரண்டு எலிமினேஷன் இருக்குமா??என்றும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் மட்டும் அல்லாமல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரமோவில் கிராண்ட் பைனல் தொடங்கிவிட்டது என்று பிக்பாஸ் கூறியிருக்கிறார். பைனல் லிஸ்ட் ஆக யார் முதலாவதாக சேவ் ஆவார்கள் என்று இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கூறி வருகின்றனர். யார் இந்த இடத்திற்கு செல்வதற்கு தகுதி இல்லை என்பதை காரணத்தை சொல்லி பிக்பாஸ் எப்போதும் போல கொளுத்திப் போட்டு விட்டது.

குறை சொல்லும் டாஸ்க்கா
டாஸ்க் என்றால் உடல் உழைப்பை காட்டுகிற மாதிரி இருக்க கூடாதா என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த மாதிரி குறை கூற சொன்னால் பலர் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டு இருப்பார்கள். அதனால் அடுத்தவர்களின் திறமை தெரியாது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். என்னதான் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடியிருந்தாலும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறி கொண்டு சண்டை போடுவது தான் இந்த டாஸ்க்களிலும் இருக்குமா என்று பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

நிரூப்பின் பிளான்
வழக்கம்போல சண்டை போட்டு இங்க ஒரு கலவரம் உண்டு பண்ணனும் என்றால் நம்ம அந்த மாதிரி பண்ணலாம் என்று நிரூப் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போட்டியாளர்களும் சண்டை போடுவார்களா?? இல்லை சமரசமாக இவர்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வார்கள?? என்று ரசிகர்களுக்கு கேள்விகள் எழுப்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் யாருடைய பெயரை அனைத்து போட்டியாளர்களும் சொல்லப் போகிறார்களோ என்ற ஆர்வமும் அனைவருக்கும் தோன்றியிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications