காசு..துட்டு..மணி..மணி.. பணத்தை கூட்டும் பிக் பாஸ்...அலைபாயும் ஒருவரின் மனது
சென்னை: ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்த தருணம் தற்போது தொடங்கியிருக்கிறது.
நேரத்திற்கு நேரம் பணத்தின் மதிப்பைக் கூட்டி பிக்பாஸ் போட்டியாளர்களின்மனதை அலைபாய விட்டிருக்கிறது.
சூட்கேஸ் பெட்டியை தூக்கிக் கொண்டு போகும் போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

பெட்டி வந்தாச்சு
ஏற்கனவே எல்லா சீசனிலும் தொடர்ந்து வரும் பணப்பெட்டி இந்த சீசனிலும் வந்திருக்கிறது. இதற்காகவே ஏற்கனவே போன வாரமே நிரூப் பேச தொடங்கிவிட்டார். அடுத்தவாரம் இந்த சம்பிரதாயம் நடக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை பற்றி நன்றாக அலசி ஆராய்ந்து இதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் எடுத்துக் கொண்டுதான் இநத வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

தொகையை பற்றி தெரியுமா?
இந்த வாரம் அமௌன்ட் வரும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள் என்று ஒரு பக்கமாக அமீர், பாவனிக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு பாதியிலேயே பாவனி சென்று விடக்கூடாது என்று இந்த முன்னேற்பாடா என்று தெரியாவிட்டாலும் பாவனிக்கு அலர்ட் கொடுத்திருக்கிறார். ஐயாயிரம் ரூபாய் கிடைத்தது தனக்கு பெரிய விஷயம் என்று கொண்டாடி வந்த தாமரைச்செல்வி தற்போது சரத்குமார் கொண்டு வந்து கொடுத்த மூன்று லட்சத்தை ஏற்றுக்கொள்வாரா?? என்று ரசிகர்கள் மத்தியில் நேற்று இருந்தே கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இதன் அமௌனட் எப்படியும் கூடும் என்பது போட்டியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பணம் அதிகரித்துள்ளது
மூன்று லட்சத்தை பார்த்ததும் இவ்வளவுதானா என்று அனைவரும் கடுப்பாகி விட்டார்கள் போல, அதனால்தான் யாரும் அதை சீண்டவில்லை. ஆனால் நிரூப் மட்டும் எப்படியும் யாரையாவது மண்டையை கழுவி எடுக்க வைத்து விட வேண்டும் என்று முன்னேற்பாடாக ஒவ்வொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தற்போது இன்றைய 3 லட்சம் , 5 லட்சம் ஆகவும் பின்பு 7 லட்சம் ஆகவும் மாறி இருக்கிறது. இதை பார்த்ததும் பல போட்டியாளர்களுக்கு கண்கள் அந்த பணப் பெட்டியின் மேல் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பெட்டி யாருக்கு
தாமரைச்செல்வி எடுத்து செல்வார் என்று ஒரு சில ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் அவருக்கு நன்றாக இந்த விளையாட்டை பற்றி தெரிந்து விட்டது. தான் எப்படியும் வந்து விடுவோம் என்று, அதனால் அவர் எடுக்க வாய்ப்பில்லை. நிரூப் தான் தனக்கு பைனல் செல்லும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இது கிடைத்தவரை லாபம் என்று முதலாவதாக எடுக்கப் போகிறார். ஆனால் எடுப்பார் என்று அடித்துக் கூறி வருகின்றனர். இந்த எபிசோடில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்று தற்போது ரசிகர்களின் மனக்குமுறல்கள் கமெண்டுகளில் பதிந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications