அதிகரிக்கும் பணத்தின் மதிப்பு ஜோசியர் ஆக மாறிய நிரூப்... பெட்டியை கைப்பற்ற போவது இவர்தானா??
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதைப் பற்றி புட்டு புட்டு வைத்துக் கொண்டிருக்கிறார் நிரூப்.
ரசிகர்களின் மனதை படிப்பதில் இவர் கை தேர்ந்தவராக இருக்கிறாரே என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸில் நடப்பதை அப்படியே முன்பே சொல்கிறாரே இவருக்கும் விஜய் டிவிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?? என்று பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

எதையும் முடிவு பண்ண முடியவில்லை
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இந்தமுறை டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் தான் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த சீசனின் போட்டியாளர்கள் யாரும் ரசிகர்களின் மனதை அந்த அளவிற்கு கவரவில்லை. ஒருசில ரசிகர்கள் ராஜூ தான் டைட்டில் ஜெயிக்க போகிறார் கூறி வருகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் எது வேணாலும் நடக்கும் என்பது பலருக்கும் தெரியும் ரசிகர்களின் ஆசை மற்றும் கருத்துக்களை தூண்டி விட்டு விட்டு விஜய் டிவி தன்னுடைய செயல்பாடுகளை தான் நிலைநிறுத்தும் என்று பலர் இப்போதே கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

யாரும் சீண்டாத பணப்பெட்டி
ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணப்பெட்டி வந்துவிட்டது. பணப்பெட்டியின் மதிப்பை பார்த்து ஆரம்பத்தில் திகைத்துப்போன போட்டியாளர்கள் அதை யாரும் சீண்டவில்லை. என்னதான் அதைப் பற்றி சரத்குமார் கூறி இருந்தாலும் யாரும் அதை மனதில் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இன்று முதல் ப்ரமோவில் பணத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் போது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் மனம் சஞ்சலம் அடைய தொடங்கி விட்டது என்று தெரிகிறது.

சஞ்சலம் அடையும் மனது
பிரியங்கா பணத்தின் மதிப்பு ஐந்து லட்சமாக கூடியிருக்கும் போது இதில் இந்த பக்கத்தில் ஒரு நான்கும் அந்தப் பக்கத்தில் கூட ஒரு ஹீரோவும் சேர்ந்தால் நான் எடுத்துக் கொள்வேன் என்று தன்னுடைய மதிப்பு இது கிடையாது என இவர் கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பாவனியும் நானும் ஒரு ஐம்பது லட்சம் இருந்தால் எடுத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தாமரைச்செல்வி அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது அவருடைய மனதிற்குள் இதைப்பற்றி பெரிய போராட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜோசியம் கூறும் நிரூப்
ஏற்கனவே இந்த வார நாமினேஷனில் நிரூப் முதல் இடத்திற்கு ராஜு மற்றும் பிரியங்கா தான் செல்வார் என்று தெளிவாக கூறியிருந்தார். இதுதான் மக்களுடைய மனநிலை என்று இவர் கூறியதை பார்த்ததும் பலரும் அதிசயப்பட்டு போனாலும், இவர் இந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நிலையில் பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும் போது அவர் எப்படியும் இது 25 லட்சம் வரைக்கும் வரும் என்று கூறியிருக்கிறார். அப்படி 25 லட்சத்தை எட்டும் தருணத்தில் அதை லபக்கென்று கைப்பற்றி விடுவதுதான் நிரூப்பின் மாஸ்டர் பிளான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். எப்படியும் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நிரூப்பிற்க்கு தெரியும் தான் இந்த வாரம் வெளியேறி விடுவோம் என்று, அதனால் இந்த பணத்தோட வெளியேறப் போவது அவர் தான் என்று அடித்துக் கூறி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications