இந்த கேமை நேர்மையாக விளையாடி இருக்கிறேன், உருக்கமான பாவனி பேச்சு... ரசிகர்களின் கமெண்ட்ஸ்
சென்னை: பாவனி தன்னுடைய ரசிகர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பங்களிப்பு நேர்மையாகவும், முழுமையாகவும் இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சின்னத்தம்பியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாவதற்கு முன்பே பாவனி சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான். இவர் முதல் முதலாக தமிழில் அறிமுகமான சின்னத்தம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் பதிந்து விட்டார். பல ரசிகர்கள் இப்ப வரைக்கும் இவரை நந்தினி என்றுதான் கூப்பிட்டு வருகின்றனர். அதற்குப் பிறகும் அந்த சீரியலின் மூலம் இவர் பல வெற்றிகளைப் பெற்ற பிறகும் அவருக்கு சீரியலின் வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தது. சன் டிவி, விஜய் டிவி என பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்பு சிலகாலம் சீரியலில் இருந்து ஒதுங்கி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறி இருந்தார்.

போட்டோஷுட்டில் பிஸி
சின்னத்திரையில் இருக்கும்போதே வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர்களின் பட்டத்தைப் பெற்றிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறி போட்டோஷூட் மூலமாக இளைஞர்கள் பலர் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இருந்தார். மாடர்ன் உடையிலும், ட்ரெடிஷனல் உடையிலும் விதவிதமாக போட்டோஸ்கள் லைக்குகளை மட்டுமல்லாமல் கமெண்ட்களையும் அள்ளிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் அதிகமாக கவர்ந்திருந்தது. ஆரம்பத்தில் பலர் இவருக்கு அட்வைஸ்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்று, ஆனால் பின்பு ஆதரவு கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

உருக வைத்த சோகக்கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகமாகும்போது முதல் முதலாவதாக இவருக்குத்தான் ரசிகர்கள் ஆர்மி அமைக்கத் தொடங்கினர். தற்போது இவருடைய ரசிகர்களின் ஆதரவினால் தான் இவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய சோக கதையை கேட்டு பல ரசிகர்கள் உருகி போய் உள்ளனர். தன்னுடைய காதல் கணவர் இறப்பு இவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகத்தையும், மாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது என்பதை பார்த்து பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒருசில நெட்டிசன்கள் இவரை கலாய்த்தும் வருகின்றனர்.

பாவனியின் பிரச்சாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவருக்கும் அபிநய்க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போதும் கூட சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக இவருடன் அமீர் நடந்து கொள்வது பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இவருடைய விளையாட்டு பலரையும் கவர்ந்து இருக்கின்றது. அவருடைய ஈடுபாட்டை பார்த்துதான் இவருக்கு ரசிகர்கள் அதிகமானோர் ஓட்டு அளித்துக் கொண்டிருக்கின்றனர். கடைசி இந்த வாரத்தில் தங்களுக்கு ஓட்டு அளிக்க வேண்டி ரசிகர்களிடம் வாக்குகளை போட்டியாளர்கள் கேட்டு வருகின்றனர். பாவனியும் தன்னுடைய ரசிகர்களிடம் வாக்கு கேட்டுள்ளார்.
Recommended Video

ரசிகர்களின் வாக்குறுதி
தற்போது நடந்து வரும் டாஸ்கின் தன்னுடைய ரசிகர்களிடம் இவர் ஓட்டுகள் அளிக்கச் சொல்லி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில் நான் இந்த கேமை நேர்மையாக விளையாடி வருகிறேன் என்று உருக்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இந்த வாரம் உங்களுக்கு தான் ஓட்டு அளிப்போம் என்று கூறி வருகின்றனர். பாவனியின் ரசிகர்களால் தான் ஒவ்வொரு வாரமும் ஜெயித்து இருக்கிறார்.அதனால் கடைசியில் இந்த வாரத்தில் அதிகளவில் பாவனிக்கு வாக்கு அளிக்கப்படும் என்று ரசிகர்கள் உறுதி கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications