உருகி உருகி புதுவிதமாக காதலைச் சொன்ன பாவனி...வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் பாவனி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் காதலிக்கும் விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார். பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த பதில் தற்போது கிடைத்துவிட்டது என்று பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
காதலிப்பவரிடம் நேரடியாக சொல்லாமல் பாவனி சமூக வலைதளத்தில் செய்த செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாவனியின் காதல் ப்ரொபோஸ் பார்த்து அமீர் இம்ப்ரஸ் ஆனாரோ இல்லையோ திரை பிரபலங்கள் பலர் இம்ப்ரஸ் ஆகி விட்டார்களாம். அதனாலே தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தளமே திணறும் வகையில் தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த நந்தினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலமாக பலருக்கும் நந்தினி கேரக்டரில் பரிச்சயமான பாவனி ரெட்டி அந்த சீரியல் முடிவடைந்த சில காலங்கள் சமூக வலைத்தளத்தில் மட்டுமே ஆக்டிவாக இருந்து வந்தார். பாவனி எப்போது சீரியலில் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி வருகிறார் என்று தெரிந்ததும் முதல் ஆளாக அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஃபேன்ஸ் பேஜ்களை மல மலவென தொடங்கும் வேளையில் பிஸியாகி விட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் பாவனிக்கு ரசிகர்கள் ஆரம்பம் முதலே அதிகமான வரவேற்பையும், ஆதரவையும் கொடுத்து வந்தனர். அதுவும் சோகமான பாவனியின் கடந்த கால நிகழ்வுகளை கேட்டு அனைவரையும் இவர் மீது அனுதாப அலைகளை வீச தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் பாதியில் இருந்து டான்ஸ் மாஸ்டர் ஆன அமீர் அறிமுகமானார். அமீர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான நாளிலிருந்து பாவனியின் பின்னாலே சுற்று தொடங்கி விட்டார். பாவனியிடம் அவர் அதிகமாக கேரிங் எடுத்து நடந்து கொள்வது சில ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்து இருந்தாலும் பலரும் இவருக்கு ஆதரவை தெரிவித்து வந்தனர்.

காதலை கூறிய அமீர்
அமீர் தனக்கு பாவனியை அதிகமாக பிடித்து இருப்பதாகவும், பாவனியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார். இதை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இது கண்டெண்ட்க்காக அமீர் இப்படி செய்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியை விறுவிறு கூட்டுவதற்காக விஜய் டிவியால் இப்படி செய்ப்ப்படுகிறார் என்றெல்லாம் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் கூட அமீர் இதே வார்த்தையில் உறுதியாக இருந்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் பாவனி எனக்கு டைம் வேணும், இப்போது முடிவு சொல்ல முடியாது என்றும் கூறி வந்தார்.

காதலை தெரிவித்த பாவனி
அமீர் பாவனியின் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பல பிரபலங்களும் பாவனிக்கு அறிவுரை கூறி வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரசிகர்கள் பலருடைய விருப்பமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ஜோடி தற்போது வெற்றி பெற்றுள்ளது. வெற்றியை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்ட பாவனி தான் அமீரை காதலிப்பதாகவும், என்றென்றும் அமீர் என்னுடையவனாக இருப்பாயா??என்றும் கேள்வியை கேட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் பாவனிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications